துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கையை பிடித்து.. நெகிழ்ந்த "லூலூ" யூசுப் அலி! துபாயில் நடந்த முதல்வரின் முக்கிய மீட்டிங்! யார் இவர்?

Google Oneindia Tamil News

துபாய்: முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களை, அமைச்சர்களை, தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக பிரபல தொழில் அதிபர் யூசுப் அலியை நேற்று மாலை அவர் நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்.

Recommended Video

    Who Is Yusuff Ali ? | MK Stalin-ஐ சந்தித்த lulu Group Yusuff Ali | Dubai Expo 2022 | Oneindia Tamil

    முதல்வர் ஸ்டாலின் துபாயில் நடக்கும் உலக அளவிலான எக்ஸ்போவில் தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைப்பதற்காக துபாய் சென்றுள்ளார். 4 நாள் பயணமாக இவர் துபாய் மற்றும் அபுதாபி சென்றுள்ளார்.

    துபாய் சென்ற முதல்வர் ஸ்டாலினை இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி மற்றும் அமீரக அமைச்சர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர். இதையடுத்து துபாய் எக்ஸ்போவை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

     துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் துபாய் உலக எக்ஸ்போ கண்காட்சியில்.. தமிழ்நாட்டின் அரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

     திறந்து வைத்தார்

    திறந்து வைத்தார்

    அதோடு இந்த எக்ஸ்போவில் தமிழ்நாடு அரசின் அரங்கையும் திறந்து வைத்தார். இங்கு அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு வாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்திகள், கைத்தறி பொருட்கள், உணவு பொருட்கள், சுற்றுலா தல விவரங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வாரம் மூலம் பல்வேறு துபாய் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் அமீரக வர்த்தக துறை அமைச்சர் தானி அஹமது, நிதித் துறை அப்துல்லா பின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார். அதோடு இந்த எக்ஸ்போவில் தமிழ்நாடு அரசின் அரங்கையும் திறந்து வைத்தார். இங்கு அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாடு வாரம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் உற்பத்திகள், கைத்தறி பொருட்கள், உணவு பொருட்கள், சுற்றுலா தல விவரங்கள் பல காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு வாரம் மூலம் பல்வேறு துபாய் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதல்வர் ஸ்டாலின் அமீரக வர்த்தக துறை அமைச்சர் தானி அஹமது, நிதித் துறை அப்துல்லா பின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை செய்தார்.

    முக்கிய சந்திப்பு

    முக்கிய சந்திப்பு

    அதேபோல் முதல்வர் ஸ்டாலின் நேற்று துபாயில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் அமைத்துள்ள புதிய ஸ்டுடியோவையும் பார்வையிட்டார். இந்த ஸ்டுடியோவை பல பிரபலங்கள் பார்வையிட்டு வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலினும் நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலையில்தான் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைவர் யூசுப் அலி முஸலிமான் வீட்டில் அப்துல் காதருடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்திப்பு நடத்தினார்.

     1 மணி நேரம்

    1 மணி நேரம்

    சுமார் 1 மணி நேரம் இவர்கள் சந்திப்பு நடத்தினார்கள். அமீரகத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றுதான் யூசுப் அலியின் லூலூ நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட், மால், ஏற்றுமதி, இறக்குமதி, வங்கி முதலீடு என்று பல்வேறு துறைகளில் முத்திரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் தற்போது பல்வேறு சூப்பர் மார்க்கெட், மால்களை திறந்து முதலீடுகளை செய்து வருகிறது. லூலூ க்ரூப் இண்டர்நேஷனலின் யூசுப் அலி கேரளாவை சேர்ந்தவர்.

    கேரளா

    கேரளா

    இவர் கேரளா மாநிலம் திருச்சூரில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதில் 1973ல் இவர் அபுதாபிக்கு சென்று அங்கு தனது உறவினர் அப்துல்லாவின் லூலூ நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி, பின்னர் அந்த நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றார். அமீரகத்தில் மதிக்கப்படும் மிகப்பெரிய பணக்காரர்களில், கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் வருடத்திற்கு 7.4 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் நிறுவனம் ஆகும்.

    வெளிநாடு

    வெளிநாடு

    இந்தியாவிற்கு வெளியே இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் மிகப்பெரிய நிறுவனம் இதுதான். அதோடு போர்ப்ஸ் அறிக்கையின்படி 2018ல் அரபு நாடுகளில் நம்பர் 1 இந்திய பிஸ்னஸ் மேன் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் யூசுப்தான். இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனம் மிகப்பெரிய மால்களை கட்டி உள்ளது. அதேபோல் பெங்களூரிலும் லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் மூலம் மால் கட்டப்பட்டுள்ளது.

    வங்கிகள்

    வங்கிகள்

    திருச்சூரில் இருக்கும் சிரியன் கத்தோலிக் வங்கி, தனலட்சுமி வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் இவர்கள் முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் காஸாவில் இருக்கும் பள்ளிகளை தத்து எடுத்தது. நேபாளில் இருக்கும் பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்தது. இந்தியாவிற்கு குஜராத் நிலநடுக்க நிதி, சுனாமி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை வழங்கியது என்று லூலூ க்ரூப் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் யூசுப் பல்வேறு பொது சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

    சந்திப்பு

    சந்திப்பு

    இந்த நிலையில்தான் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பிஸ்னஸ் மேனான யூசுப் அலியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் இதற்கு முன் சில முறை பேசி உள்ள நிலையில். நேற்று மிகவும் சகஜமாக பழகினார்கள். முதல்வர் ஸ்டாலின் கையை யூசுப் அலி பிடித்துக்கொள்ள, சிரித்தபடி இருவரும் நெருக்கமாக, நெகிழ்ச்சியாக, நட்பாக பேசினார்கள். தமிழ்நாட்டில் லூலூ நிறுவனம் இதுவரை பெரிய அளவில் முதலீடுகளை செய்யவில்லை.

    சிங்கார சென்னை 2.0

    சிங்கார சென்னை 2.0

    தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் சென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த துபாய் எக்ஸ்போ மூலம் தமிழ்நாட்டில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தொழில் அதிபர் யூசுப் அலியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தது அதிக கவனம் பெறுகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு அதிக முதலீடுகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.

    English summary
    Tamilnadu CM Stalin meets Dubai LuLu groups Chairmain Yusuff Ali in his trip yesterday. முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களை, அமைச்சர்களை, தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X