ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

”நீட் தேர்வு கூடாது” முதல் தலைமுறை பட்டதாரிகளை பாதிக்கிறது.. நடிகர் சத்யராஜ் பரபரப்பு!

Google Oneindia Tamil News

ஈரோடு: நீட் நுழைவுத் தேர்வு முதல் தலைமுறை பட்டதாரிகளை பாதிப்பதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் நடந்த இரு தற்கொலை சம்பவங்கள் மாநிலத்தையே உலுக்கின. நீட் தேர்வு தோல்வியால் மாணவி ஸ்வேதா தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் கவிஞரும் பாடலாசிரியருமான கபிலனின் மகள் தூரிகை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவரின் தற்கொலை பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.

உங்கள் ஆபிஸ்ல டீ, காப்பி குடுக்குற வேலை இருந்தா கொடுங்க.. ஆங்கரிடம் கேட்ட சத்யராஜ் பட காமெடி நடிகை உங்கள் ஆபிஸ்ல டீ, காப்பி குடுக்குற வேலை இருந்தா கொடுங்க.. ஆங்கரிடம் கேட்ட சத்யராஜ் பட காமெடி நடிகை

ஈரோட்டில் சத்யராஜ்

ஈரோட்டில் சத்யராஜ்

ஆனால் சமீப காலமாக மன அழுத்தம் காரணமாக தற்கொலை சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதனால் மனநலத்தின் முக்கியத்துவம் குறித்து பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் ஈரோட்டில் மனதின் மையம் அறக்கட்டளையின் ஒரு அங்கமான நேசம் சேவை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தற்கொலை தடுப்பு

தற்கொலை தடுப்பு

இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிகவும் அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, உறவில் சிக்கல், மூட நம்பிக்கைகள், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பெண் அடிமைத்தனம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம், பொருளாதார சிக்கல்.

மனநலம் முக்கியம்

மனநலம் முக்கியம்

மனநலம் மேம்படுட்டால் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் சரியாகி விடும். உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால் மனநலம் சார்ந்த பிரச்னை ஏற்பட்டால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்.ஜி.ஆரின் பாடல் கேட்பேன். அதன் மூலம் நிறைய தெளிவு கிடைக்கும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அவர், நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் உள்ளவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட்தேர்வு பாதிக்கும் என்பதால் அது அவசியம் இல்லை. டாக்டர், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள், அவர்கள் படித்து குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

நடிகர்கள்

நடிகர்கள்

தொடர்ந்து, நடிகர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டுள்ளனர். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பை தவிர வேறு எதுவும் தெரியாது. நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் அல்ல போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ அல்ல. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள், ஆனால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடாதீர்கள். அது தேவையில்லை என்று தெரிவித்தார்.

English summary
Actor Sathyaraj Opens a Mental Health Centre in Erode. He Said, Mental Health is very important for each and every person. It leads to Suicide. Also NEET Exam affects the development of First Generation Students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X