ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்..பலமுனை போட்டியில் வெல்வது யார்?..மாதிரி மின்னணு வாக்குப்பதிவு
ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். இதனையடுத்து காலியாக இருந்த அந்த சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. வேட்பாளராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும் முன்பே ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் ஒரு பக்கம் வேட்பாளரை நிறுத்த உள்ளனர். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வமும் தான்தான் ஒருங்கிணைப்பாளர், எங்கள் அணியில் இருந்து தனியாக வேட்பாளரை நிறுத்துவோம் என கூறி வருகின்றனர். பிளவுபட்டுள்ள அதிமுகவில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தல் போட்டியில் இருந்து பாஜக விலகி விட்டது அதே நேரத்தில் பெரிய கட்சி அதிமுகதான் என்றும் அதற்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று கூறி விட்டது. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கா, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கா என்று தெளிவாக கூறவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து களமிறங்க உள்ளது. அதற்கான வேட்பாளரையும் அறிவித்து விட்டார் பிரேமலதா. அதே போல நாம் தமிழர் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விரைவில் வேட்பாளரை அறிவிக்க உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியோ, இடைத்தேர்தலால் பண விரையம், நேரவிரையம் என்று கூறி போட்டியிடாமல் விலகி விட்டது. இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து விட்டார். திமுகவும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் மட்டுமே களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஈரோடு கிழக்கு தொகுதியில் 11 ஆயிரம் வாக்குகள் பெற்ற மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு தேவை என்பதை உணர்ந்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன். தேர்தலுக்கு ஒரு பக்கம் அரசியல் கட்சியினர் தயாராகி வரும் நிலையில் தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் சுறுசுறுப்பாக தயாராகி வருகின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். இடைத்தேர்தலுக்கா மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.
பிப்ரவரி தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணன் உன்னி முன்னிலையில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications