ஓசூரில் உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் செலுத்த மறுத்து மேலாளர் மீது தாக்குதல்.. சிசிடிவி காட்சி
ஓசூர்: ஓசூர் அருகே உணவகத்தில் சாப்பிட்ட உணவுக்கு பணம் செலுத்த மறுத்து மேலாளரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர். உணவகத்தில் மேலாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் பிரபல மெக்டொனால்ட் உணவகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த உணவகத்திற்கு வந்த ஓசூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், அர்ஜுன், கார்த்திக், மணி ஆகிய 4 பேரும் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றுள்ளனர். அப்பொழுது உணவகத்தின் மேலாளர் சூளகிரியைச் சேர்ந்த ஹரிஷ் இவர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளபோது, பில் தொகை கொடுக்க மறுத்து அந்த நான்கு பேரும் மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் உணவக மேலாளரை கடுமையாக தாக்கினர். மேலும் உணவகத்தில் இருந்த கம்ப்யூட்டர், செல்போன், சுவைப்பிங் மிஷின், உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

4 பேர் மீது வழக்கு
இதனையடுத்து காயமடைந்த உணவக மேலாளர் ஹரிஷ் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மேலாளர் ஹரீஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சூளகிரி போலீசார் உணவகத்தில் தகராறில் ஈடுபட்ட கணேஷ், அர்ஜுன், கார்த்திக், மணி ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் கணேஷ் மற்றும் அர்ஜுன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரபல உணவகத்தில் சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் நான்குபேரும் தகராறில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

உயிரிழப்பு
புதுச்சேரியில் தனது பிறந்தநாளின் போது தேசிய நெட்பால் விளையாட்டு வீரரான 11 வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஆத்துவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் கவிதா என்பவரின் மகன் தமிழ்மணி. இவருக்கு இரண்டு சகோதரர்கள் உள்ளனர். 17 வயதான இவர் ஜீவானந்தம் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

ரயில்வே டிராக்
இவர் தேசிய வாலிபால் மற்றும் தடகள வீரர் ஆவார். இவர் தினந்தோறும் கதிர்காமம் அரசு பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் நெட் பால் பயிற்சி எடுப்பதற்காக செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி உள்ளார். வரும் வழியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே ட்ராக் அருகே வந்து சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.

காவல் நிலையம்
அப்போது திடீரென தண்டவாளத்தில் படுத்து தலையை வைத்துள்ளார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் இவர் மீது ஏறி இறங்கியதில் மாணவனின் தலை துண்டாகி உயிரிழந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாணவனின் தாய் மற்றும் சகோதரர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இன்று அந்த மணவனுக்கு பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications