ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே.. அய்யோ.. அம்மா என கதறி துடித்த இளம்பெண்! உலுக்கும் வீடியோ!
ஹைதராபாத்: ஆந்திராவில் ரயிலில் இருந்து இறங்கும் போது கால் இடறி தவறி விழுந்த இளம்பெண் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குள்ளும் இடையே சிக்கிக் கொண்டார். வெளியே வர முடியாமல் அந்த மாணவி கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.
பயணங்கள் எந்த அளவுக்கு ரசிக்கக்கூடியதாக இருக்கிறதோ.. அதே அளவுக்கு நாம் கவனமாக இல்லாவிட்டால் ஆபத்தும் நிறைந்துள்ளது.
இதற்கு ரயில், கார் என எந்த வகையிலான பயணமும் விதி விலக்கல்ல. சற்று பொறுமை இழந்து செயல்பட்டாலோ... அஜாக்கிரதையாக இருந்தாலோ.. வாழ்நாள் எல்லாம் கஷ்டப்படும் அளவுக்கு நிலமை ஏற்பட்டு விடும்.

ரயில் விபத்து
ஆனால், இத்தகைய ஆபத்துக்களை உணராமல் சில பள்ளி, கல்லூரி மாணவர்களும் நாள்தோறும் ரயில், பேருந்துகளிலும் சாகசங்கள் என்ற பெயரில் ஆபத்துக்களை உணராமல் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். பயணத்தின் போது சிறிய விபத்துக்கள் கூட பெரும் துயரத்தை கொடுத்து விடும் என்பதற்கு எடுத்துக்காட்டாகத்தான் ஒரு ஆந்திராவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கால் தவறி விழுந்த மாணவி
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள அன்னவரம் என்ற பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சசிகலா. இவர் துவ்வாடாவில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ படித்துவருகிறார். கல்லூரிக்கு தினமும் தனது ஊரில் இருந்து குண்டூர்- ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் கல்லூரிக்கு சென்று வருகிறார். அந்த வகையில் நேற்றும் வழக்கம் கல்லூரிக்கு ரயிலில் புறப்பட்டு சென்றார். துவ்வாடா ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார். அப்போது கால் இடறி ரயிலுக்கும் பிளாட்பாரத்தும் இடையில் சிக்கிக் கொண்டார்.

வலியால் கதறி அழுத மாணவி
இதை கவனித்த சக பயணிகள் அலறி கூச்சல் போட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், மாணவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனினும், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்குள்ளும் சிக்கிக் கொண்ட அவரால் வெளியே வர முடியவில்லை. அங்கிருந்த பயணிகள் கை கொடுத்து முயற்சி செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. தகவல் அறிந்த ரயில்வே போலீசாரும் அங்கு வந்தனர். அவர்களும் வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், துளியும் பலன் இல்லை. இதற்கிடையே மாணவி வலியால் கதறி அழுதார்.

2 மணி நேர போராட்டத்துக்கு பின்
நீண்ட நேரம் போராடியும் மாணவியை மீட்க முடியவில்லை. இதையடுத்து பிளாட்பாரத்தில் உள்ள காங்கிரீட்டை இடித்து மாணவி சசிகலாவை பத்திரமாக மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவி மீட்கப்பட்டது அங்கு இருந்த பயணிகளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தது. மீட்கப்பட்ட மாணவி சசிகலா உடனடியாக விசாகப்பட்டினத்தில் உள்ள கிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் சுமார் 2 மணி நேரம், தாமதமாக குண்டூர் -ராயகடா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications