"ஐ லவ் யூ.." காதல் தோல்வியால் 21 வயது பெண் யூடியூபர் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ந்த நெட்டிசன்கள்
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசித்த 21 வயது யூடியூபரும் கல்லூரி மாணவியுமான போனு கோமலி தற்கொலை செய்து கொண்டுள்ளார். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இருந்த கோமலி வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காலத்தில் இளைஞர்கள் மனவுறுதி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இருப்பினும், சில நேரங்களில் நொடிப்பொழுதில் தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

21 வயது யூடியூபர்
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசித்த 21 வயது யூடியூபரும் கல்லூரி மாணவியுமான போனு கோமலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் குவைத்தில் வசிக்கும் தனது தாய்க்கு "ஐ லவ் யூ சோ மச்" என மெசேஜ் அனுப்பிவிட்டு சற்று நேரத்திலேயே, தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கோமலி, 11 மாதங்களாக ஹைதராபாத் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். ஹைதராபாத் வந்தவுடன் அவர் கல்லூரி வாழ்க்கை, வெளியே பார்ப்பது ஆகியவற்றை யூடியூப்பில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதற்குத் தொடக்கம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் குறுகிய காலத்திலேயே அதிக பாலோயர்ஸும் கிடைக்க ஆரம்பித்தனர்.
ஐ லவ் யூ
இந்தச் சூழலில் தான் திங்கட்கிழமை அதிகாலையில் அவர் குவைத்தில் வசிக்கும் தாய் பி.சத்ய வரலட்சுமிக்கு "ஐ லவ் யூ மம்மி சோ மச்" என கோமலி குறுஞ்செய்தி அனுப்பினார். மேலும், தம்பியையும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பிறகு அவர் தனது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். அவரது தாய் பல முறை கால் செய்தும் போனை எடுக்கவே இல்லையாம்.
இதனால் அவரது தாயார் உடனடியாக கோமலியின் தோழிகளுக்கு இது குறித்து தெரிவித்துள்ளனர். என்னாச்சு என பார்த்துச் சொல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து கோமலியின் வீட்டிற்கு நண்பர்கள் சென்று பார்த்துள்ளனர்.
தற்கொலை
நண்பர்கள் அங்குச் சென்று கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் கூட யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றிக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து ஏணி, புடவை ஆகியவையும் மீட்கப்பட்டது.
காதல் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் கோமலி இந்த தற்கொலைகள் முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னணி
அதாவது கோமலி, கடந்த 3 ஆண்டுகளாக 27 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். அந்த நபரும் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர் தான். இருவரும் 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் தான் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரேக்அப் செய்து கொண்டுள்ளனர்.
இதைத் தாங்க முடியாத கோமலி, ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். அப்போதே உறவினர்களும் நண்பர்களும் தான் அவரை மீட்டுள்ளனர். மேலும், அவருக்கு மருத்துவ கவுன்சிலிங் கூட அளிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அந்தப் பெண் மீண்டும் தப்பான முடிவை எடுத்துள்ளார்.
என்ன நடந்தது
உறவினர் வீட்டில் கோமலி வசித்து வந்த நிலையில். சம்பவம் நடந்த நாளில் உறவினர்கள் வெளியே சென்றுள்ளனர். இதையடுத்து கோமலி தனது மாஜி காதலருக்கு போன் செய்து வீட்டிற்கு வரச் சொல்லியுள்ளார். வீட்டில் இருவருக்கும் காதல் மற்றும் திருமணம் தொடர்பாகச் சண்டை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த நபர் அவரது ரூமில் இருந்து வெளியேறும் வீடியோ அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்தே கோமலி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
கோமலி உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக ஒஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். செல்போன் ரெக்கார்ட், சிசிடிவி, மெசேஜ்கள் மற்றும் நண்பர்கள், அக்கம் பக்கத்தினரின் வாக்குமூலங்களை வைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications