3 மாத கர்ப்பிணி மனைவி தூங்கும் போது சுத்தியலால் அடித்து கொலை! தலைமறைவாக இருந்த காதல் கணவர் கைது!
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கர்ப்பிணி மனைவி தூங்கும் போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர், அங்கிருந்து பைக்கில் தப்பி தலைமறைவான அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இறந்த மனைவி ஒரு யூடியூபர் என சொல்லப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, வைஷ்ணவி (20) தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்தில் நெரிக்கப்பட்ட தழும்புகளும், உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

காதல் திருமணம்: வைஷ்ணவியும், தனியார் நிறுவன ஊழியரான ஹரிபாபு (24) என்பவரும் காதலித்து வந்தனர். இரு குடும்பத்தினரும் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கடந்த மே 29, 2025 அன்று ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
வரதட்சணை கொடுமை: திருமணத்தின் போது வைஷ்ணவியின் தந்தை 2 குண்டா நிலத்தை வரதட்சணையாகக் கொடுத்தார். இருப்பினும், ஹரிபாபுவின் குடும்பத்தினர் வைஷ்ணவியை ஏற்க மறுத்ததால், இருவரும் வைஷ்ணவியின் தந்தை வீட்டிலேயே வசித்து வந்தனர்.
மேலும் 5 லட்சம் கேட்டு மிரட்டல்: ஹரிபாபு தனது கடன்களை அடைக்க மேலும் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வைஷ்ணவியைத் துன்புறுத்தி வந்துள்ளார். வைஷ்ணவி கர்ப்பமடைந்த பிறகும் இந்தக் கொடுமை நீடித்துள்ளது.
போலீஸ் அதிரடி கைது:
கொலை நடந்த அன்று அதிகாலை 6 மணியளவில் ஹரிபாபு தனது பைக்கில் வீட்டிலிருந்து தப்பிச் செல்வதை உறவினர்கள் பார்த்துள்ளனர். தலைமறைவாக இருந்த ஹரிபாபுவை, கோருட்லா புறநகர்ப் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரத்தம் படிந்த ஆடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக ஹரிபாபுவின் தாய் லட்சுமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.
இதுகுறித்து வைஷ்ணவியின் தந்தை கூறுகையில், "ஹரிபாபு 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டபோது, நான் அவருக்கு மடோபூர் புறநகரில் இரண்டு குண்டா நிலத்தை வாங்கிக் கொடுத்தேன். மேலும் 5 லட்சம் ரூபாய் கடனுக்காகவும் கேட்டுத் தொந்தரவு செய்தார்.
குழந்தைகள் பிறந்ததும் தருவதாக நான் உறுதியளித்தேன். ஆனால் ஹரிபாபு, தாயார் லட்சுமி மற்றும் சகோதரர்கள் ஆனந்த், அசோக் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், என் மூன்று மாத கர்ப்பிணி மகளை மேலும் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமைப்படுத்தினார் " என தெரிவித்துள்ளார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications