பால் கறப்பது எப்படி? கிராம மேலாண்மை...சர்ட்டிபிகேட் கோர்ஸ் நடத்தலாமே..பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பால் கறப்பது எப்படி? கிராம மேலாண்மை ஆகியவை தொடர்பாகவும் சான்றிதழ் படிப்புகள் நடத்தலாம் என இந்திய கலாசார உறவுகள் குழுமத்தின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான வினய் சகஸ்ரபுத்தே யோசனை தெரிவித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொறியாளர்கள் நிறுவனம் (இந்தியா-தெலுங்கானா கிளை) மற்றும் ஜிசிஓடி எனப்படும் கிராமோதயா என்.ஜி.ஓ. ஆகியவை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற வினய் சகஸ்புரத்தே பேசியதாவது:

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையானது பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கிராமங்களின் மேம்பாட்டுக்கான கல்வி முறை தொடர்பாக கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் மாற்றங்கள் தேவையானதாகவும் இருக்கிறது.

Why not courses on cow milking, village management? asks Vinay Sahasrabuddhe

உயர் கல்வி என்பது கிராமப்புற மக்களுக்கு மதிப்பையும் மரியாதையையும் தரக்கூடியதாக இருக்க வேண்டும். உதாரணமாக எருமை, மாடுகளில் இருந்து பால் கறப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பால் கறப்பது எப்படி என்பது தொடர்பாக ஒரு சான்றிதழ் படிப்பு நடத்தலாம். இதுபோன்ற படிப்புகளை உள்ளடக்கி அதையே டிகிரி படிப்பாகவும் மாற்றலாம். கிராமப்புற மேலாண்மை, நாட்டுப்புற கலைகள் ஆகியவற்றுக்கும் கூட சான்றிதழ் படிப்புகள் நடத்தலாம்.

கிராமங்களில் ஜாதி, மத மோதல்களால் நல்லிணக்கம் என்பது குறைந்து வருகிறது. கிராமப்புறங்களில் மக்களிடையே நல்ல புரிதல்களை ஏற்படுத்தக் கூடிய கல்வி முறை அவசியாமனது. கிராமங்களில் நமது பாரம்பரிய மருத்துவ முறைகள் ஏராளமாக இருந்தன. ஆனால் இப்போது நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம். இவ்வாறு வினய் சகஸ்ரபுத்தே கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+