For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம், மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறையின் நிரந்தர விசாரணை அதிகாரி ராஜேஷ்வர் சிங்: மத்திய அரசு

By Mathi
Google Oneindia Tamil News

/news/india/2g-probe-ed-officer-made-permanent-211377.html
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் அமலாக்கத்துறையின் நிரந்தர விசாரணை அதிகாரியாக ராஜேஷ்வர் சிங் நீடிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது..

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு மற்றும் ஏர்செல் - மேக்ஸிஸ் ஒப்பந்த பேர வழக்கில், சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரி ராஜேஷ்வர் சிங் விசாரணை நடத்தி வந்தார். அவரை மீண்டும் மாநில அரசின் பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்தது,

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், விசாரணை அதிகாரியான ராஜேஷ்வர் சிங்கை மாற்றக்கூடாது என்றும் நிரந்தர அதிகாரியாக அவரை நியமிக்குமாறும் செப்டம்பர் 8-ந் தேதியன்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இதை ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் பொறுப்பிலுள்ள ராஜேஷ்வர் சிங், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நிரந்தர விசாரணை அதிகாரியாக செயல்படுவார் என கூறியுள்ளது.

English summary
Following the directions of the Supreme Court, the government has issued orders for the permanent appointment of Rajeshwar Singh, an Enforcement Directorate (ED) officer who is conducting investigations in the 2G spectrum scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X