For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 வயது சிறுமியின் வாயில் முளைத்த 202 பற்கள் அகற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மனிதர்களுக்கு சாதாரணமாக 32 பற்கள்தான் இருக்கும். ஒன்றிரண்டு பற்கள் கூடுதலாக இருந்தாலே சமாளிப்பது கடினம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், 7 வயது சிறுமியின் வாயிலிருந்து சிறிதும் பெரிதுமாக முளைத்திருந்த 202 பற்களை அகற்றியுள்ளனர்.

குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும் பெரிதுமாக 202 பற்கள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பற்களை மிகவும் கவனமாக அகற்றினர்.

சிறுமியின் வாயில் வளர்ந்திருந்த பற்களை அகற்ற பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எலும்பு முறிக்கும் கருவியை பயன்படுத்தினர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர் அஜோய், ‘பொதுவாக இத்தகைய பற்களின் வளர்ச்சியை காண முடியும். ஆனால், 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது' என்றார்.

இந்த அறுவை சிகிச்சை சுலபமானது என்றாலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை இருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு சிகிச்சை நடைப்பெற்றதாக தெரிவித்தார் மருத்துவர்.

சிறுமியின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதால், இது தான் அவளுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிகிச்சை மேற்கொண்ட சிறுமிக்கு தற்போது திரவ உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அவளால் முன்பு போல உணவு சாப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பை மருத்துவமனைக்கு இதே பாதிப்புடன் வந்த 17 வயது வாலிபரின் வாயிலிருந்து 232 பற்களை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்க்து.

English summary
Doctors at the All India Institute of Medical Sciences recently removed as many as 202 denticles—abnormal teeth-like growth—from a 7-year-old girl. A Gurgaon-based hotelier had brought her daughter to the institute's dental centre with swollen gums and pain in the mouth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X