
அட கொடுமையே.. சாமி கும்பிட சென்ற பக்தருக்கு இப்படியா நடக்கனும்..எப்படி வந்து மாட்டிருக்காரு பாருங்க!
அகமதாபாத்: கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர் ஒருவர் தனது அதீத பக்தியால் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவில் வளாகத்தில் உள்ள சாமி சிலைகள் முன்பு பக்தர்கள் தரையில் விழுந்து வணங்குவதுண்டு.
அதேபோலத்தான் கோவில் வளாகத்தில் உள்ள யானை சிலை முன்பாக விழுந்து வணங்கியிருக்கலாம் என கருதப்படும் ஒரு நபர் ஆர்வக்கோளாறில் யானை சிலைக்கு அடியில் புகுந்து வெளியே வர முடியாமல் படாத படுகிறார்.

பரிதவிக்கும் காட்சிகள்
இது தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டரில் உலா வருகிறது. நிதின் என்ற நெட்டிசன் இந்த பதிவை பகிர்ந்துள்ளார். சில வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவில், கோவிலில் உள்ள யானை சிலைக்கு அடியில் பாதியளவு புகுந்தபடி வெளியில் வர முடியாமல் ஒருவர் தவித்துக்கொண்டு இருக்கிறார். முன்னேயும் செல்ல முடியாமல் பின்னேயும் வர முடியாமல் அவர் பரிதவிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பிடித்துள்ளன.

அருகில் உள்ளவர்களும் உதவி
கோவிலில் இருந்த பூசாரி உள்பட மேலும் சிலரும் அவருக்கு உதவ முயற்சிக்கின்றனர். ஆனால் இதற்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. யானை சிலை முன்பு வெளியில் வருவதற்காக சில ஆலோசனைகளையும் அங்கு நிற்கும் பக்தர்கள் சிலர் கூறும் சத்தங்களும் வீடியோவில் கேட்கின்றன. அங்கு நின்று இருந்த நபர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது. ஆனால், இந்த நபர் இறுதியில் வெளியில் வந்தாரா.. என்பது தெரியவில்லை.

அதீத பக்தி உடல் நலத்திற்கு கேடு
இந்த சம்பவம் நடைபெற்ற இடமும் தெரியவில்லை. இந்த பதிவை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் நிதின் என்ற நெட்டிசன் அதீத பக்தி உடல் நலத்திற்கு கேடு என்ற கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த சிலைக்குள் எப்படி இந்த நபர் போய் சிக்கிக் கொண்டார் என்ற குழப்பத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், இவ்வளவு சிறிய சிலையின் அடிப்பாகத்திற்குள் எப்படி இந்த நபர் நுழைந்தார்.

இப்படி ரிஸ்க் எடுக்க மாட்டேன்
"உண்மையிலேயே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "அவர் பத்திரமாம மீட்கப்பட்டு இருப்பார் என்று நம்புவோம். நான் ஒருபோதும் இப்படி ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டேன்" என்று பதிவிட்டு இருக்கிறார். மேலும் சில நெட்டிசன்களோ.. கடைசி வரை இந்த நபரால் வெளியே வர முடியாவிட்டால் எந்த ஆப்ஷனை கையில் எடுப்பார்கள் என்று சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். இதுபோல நெட்டிசன்கள் பலரும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த வீடியோவை நிதின் என்ற நெட்டிசன் பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோ பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து தொடர்ந்து பரவி வருகிறது.