தொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தொண்டரை கால் அமுக்க வைத்த பாஜக எம்.எல்.ஏ.: தீயாக பரவிய வீடியோ

  அலகாபாத்: உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு தொண்டர் ஒருவர் கால் பிடித்துவிடும் வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ 'நந்த கோபால் குப்தா நந்தி' என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

  உத்தர பிரதேசத்தில் வரும் நவம்பர் 22ம் தேதியில் இருந்து உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அங்கு அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  A video of UP BJP MLA Nand Gopal Gupta Nandi has gone viral

  அலகாபாத்தின் தெற்கு பகுதியில் நேற்று நந்த கோபால் குப்தா நந்தி என்ற பாஜக எம்.எல்.ஏ மிகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக அங்கு இருந்து கட்சி அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்.

  அங்கு அவர் தனது தொண்டர் ஒருவரை கால் அமுக்கி விடும்படி கூறியுள்ளார். அந்த தொண்டர் எம்.எல்.ஏவுக்கு கால் அமுக்கிவிட்ட சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

  இந்த சம்பவம் நடக்கும் போது கூடவே இன்னும் இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். அவர்கள் இதுகுறித்து எதுவும் சொல்லாமல் இருந்திருக்கின்றனர். தற்போது இந்த வீடியோ அந்த பாஜக எம்.எல்.ஏவுக்கு பெரும் தலைவலியாகி இருக்கிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A video of UP BJP MLA Nand Gopal Gupta Nandi has gone viral. In that video, a BJP worker is seen giving foot massage to the MLA Nand Gopal.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற