பிறந்தநாள் கொண்டாட சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... மும்பை தீ விபத்தில் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் பயங்கர தீ விபத்து...வீடியோ

  மும்பை: மும்பையில் இருக்கும் கமலா மில்ஸ் வளாகத்தில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த வளாகத்திற்கு பிறந்த நாள் கொண்டாட சென்ற பெண்ணும் இந்த தீ விபத்தில் மரணம் அடைந்து இருக்கிறார்.

  3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்தினார்கள். இதுவரை இந்த தீ விபத்து காரணமாக 15 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

  மேலும் இதில் பலர் காயம் அடைந்து இருக்கின்றனர். காயம் அடைந்த அனைவரும் மும்பையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

  மோசமான தீ

  மோசமான தீ

  மும்பையில் இருக்கும் கமலா மில்ஸ் பெரிய வளாகம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டுப்படுத்த முடியாமல் பரவி இருக்கிறது. அங்கு இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

  மொட்டை மாடி வரை பரவியது

  மொட்டை மாடி வரை பரவியது

  முதலில் ஆறாவது மாடி வரை பரவிய இந்த தீ பின் மொட்டை மாடி வரை சென்று இருக்கிறது. அங்கு 12.30 மணிக்கு தீ ஏற்பட்ட போது மொத்தம் 150 பேர் இருந்துள்ளனர். மேலும் இந்த தீயை கட்டுப்படுத்த தீ அணைப்பு படையினர் அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த தீ மிகவும் மோசமான 'ஏ1' ரக தீ என்று கூறப்பட்டு இருக்கிறது.

  பிறந்த நாள் கொண்டாட்டம்

  பிறந்த நாள் கொண்டாட்டம்

  அந்த மாடியில் மும்பையை சேர்ந்த 28 வயது பெண் ஒருவரும் அவரது நண்பர்களும் இருந்துள்ளனர். சரியாக 12 மணிக்கு அவர்கள் கேக் வெட்டி அந்த பெண்ணின் 28வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது அங்கு சரியாக தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் அந்த பெண்ணும் அவரது நண்பர்கள் சிலரும் மரணம் அடைந்துள்ளனர்.

  அடையாளம்

  அடையாளம்

  அந்த பெண்ணின் உடலை அவளது காதலன் அடையாளம் காட்டி இருக்கிறார். இந்த விபத்து குறித்து பேசிய அவர் ''இந்த விபத்து எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. திடீர் என்று எல்லோரும் ஓடினார்கள். நாங்கள் சுதாரிப்பதற்குள் தீ மொத்தமாக பரவிவிட்டது. எதுவுமே எங்களுக்கு புரியவில்லை'' என்று அவர் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Fire spread all over in in Mumbai's Kamala Mills complex from last night. Mumbai Eyewitnesses, which included several journalists working in media organisations having their offices in the same compound, said the fire was fast spreading and had also affected two adjoining diner-cum-pubs. A Woman celebrating her birthday died in Mumbai pub fire

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற