For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷில்லாங் ஐ.ஐ.எம். வளாகத்தில் மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் சிலை திறப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஷில்லாங்: மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். வளாகத்தில் மறைந்த மக்களின் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சிலை திறக்கப்பட்டுள்ளது.

ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் ஜூலை 27-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Abdul kalam bust statue launched in shilling IIM campus

இந்நிலையில் மறைந்த கலாமின் 84-வது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஷில்லாங் ஐ.ஐ.எம் வளாகத்தில் அதன் இயக்குனர் அமிதாபா டி பல்வேறு நிகழ்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. மேலும் விஞ்ஞானம், அறிவியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு கலாம் ஆற்றிய தொண்டுகள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதுகுறித்து அமிதாபா கூறுகையில், இதோபோல் ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி் மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படும்; ஐ.ஐ.எம் வளாகத்தில் உள்ள கலைஅரங்கத்திற்கு கலாம் பெயர் சூட்டப்படும் என்றார்.

English summary
A bust statue of the former president would be installed in front of the IIM campus auditorium, in shillong.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X