நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தப்பட்டது தொடர்பாக 7 பேர் மீது போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

பிரபல நடிகை பாவனா கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காரில் வந்த போது கடத்தப்பட்டார். இது தொடர்பாக அவரது முன்னாள் கார் டிரைவர் பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில்குமார் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Actress Bavana trafficking case: charge sheet filed on 7 members

இவர்களில் 7 பேர் மீது ஆலுவா டிஎஸ்பி பாபு குமார் தலைமையிலான போலீஸார் அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாவனா காரில் செல்வது குறித்து பல்சர் சுனிலுக்கு தகவல் கொடுத்த டிரைவர் மார்ட்டின் ஆன்டனி, கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரதீப், விஜீஸ், மணிகண்டன், கோவையில் தலைமறைவாக இருக்க உதவிய சார்லி தாமஸ் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான சதி திட்டம் குறித்து விசாரிக்க போலீஸார் திட்டமி்ட்டுள்ளனர். கடத்தல் சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று டிஎஸ்பி பாபு குமார் தெரிவித்துள்ளார். குற்றப்பத்திரிகை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யாவிட்டால் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதால் விரைவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Aaluva police has filed chargesheet in court regarding actress Bavana trafficking case.
Please Wait while comments are loading...