
யார்னு பாருங்க.. இந்த "பிரபலம்" நடுத்தெருவுக்கே வந்துட்டாரு.. பெருகும் அட்டகாசம்.. அவங்கதான் காரணம்
காபூல்: தாலிபன்களின் அராஜகம் பெருகி வரும் நிலையில், பெண்கள்தான் கண்ணீர் வடித்து வருகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த மக்களும் கதிகலங்கி போயுள்ளனர்..!
பெண்களுக்கு உரிமைகளை அளிப்போம் என்று வாக்களித்துவிட்டு, ஆட்சி அமைந்ததுமே சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை தாலிபன்கள்.
மாறாக, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்... அதிலும் படித்த பெண்கள் என்றும் பார்க்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள் என்றும் பார்க்காமல், தாலிபன்கள் விதித்து வரும் கெடுபிடிகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது...

பர்தா
ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக்கூடாது, 6-ம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் கல்வி கற்ககூடாது, பெண்களுக்கு டிரைவிங் லைசென்சு வழங்க தடை, பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும், அரசுப் பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள், அதேபோல் அரசுப் பணிகளில் உள்ள ஆண்களின் மனைவியோ, மகளோ பர்தா அணியாவிட்டால் அவர்கள் மீதும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உட்பட அவர்களது கண்டிஷன்கள் கவலையை தந்து வருகிறது.

மீடியா
இதுபோக, எந்நேரமும் தாலிபன்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.. இதெல்லாம் பார்த்து அந்நாட்டு பெண்கள் கதிகலங்கி போயுள்ளனர்... தாலிபன்களின் அட்டகாசங்கள் பெருகி வரும் நிலையில், அவர்களை அங்குள்ள மீடியாக்களும் கேள்வி கேட்காத நிலைமை உள்ளது.. செய்தியாளர்களும், செய்தி வாசிப்பாளர்களும், மீடியாவில் வேலை பார்ப்பவர்களும் விழிபிதுங்கி வருகிறார்கள்..

நியூஸ் ரீடர்ஸ்
ஏற்கனவே, அங்குள்ள பெண் செய்தி வாசிப்பாளர்கள் டிவியில் செய்தி வாசிக்கும்போது, தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும், அதேபோல, பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, என்று தலிபான்கள் உத்தரவிட்டிருந்தனர்.. இதுபோக ஏராளமான கெடுபிடிகள் காரணமாக, செய்தியாளர்கள் பலர் வேலைவாய்ப்பை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டது.. மொத்தத்தில் ஊடக சுதந்திரம் என்பதே கொஞ்சம்கூட அங்கு காணப்படவில்லை.. இப்போது மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது..

மூசா முகமது
அவர் பெயர் மூசா முகமது.. அங்குள்ள டிவிக்களில் அன்று, மிகவும் பிரபலமான செய்தியாளர்.. நெறியாளராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனால், இன்று இவர் நிலைமை என்ன தெரியுமா? ரோட்டோரம் சமோசா விற்றுக் கொண்டிருக்கிறார்.. வேறு வருமானம் இன்றி, தன்னுடைய குடும்பத்திற்காக சமோசா விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்... இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஃபேமஸ் நெறியாளர்
கபீர் ஹக்மால் என்ற முந்தைய ஆட்சியில் பணிபுரிந்தவர், இந்த போட்டோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.. அதில், "மூசா முகமது ஆப்கானிஸ்தானின் நிறைய டிவிக்களில் செய்தியாளராக, நெறியாளராக பணியாற்றியவர்... இப்போது தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு இருந்தும், அதற்கான வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்... அதனால், இப்படி சாலை ஓரங்களில் ஏதேனும் உணவுப் பொருட்களை விற்று பிழைப்பு நடத்துகிறார்.,.. குடியரசு ஆட்சி வீழ்ந்த பிறகு ஆப்கான் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்" என்று பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் விடும் ஆப்கன்
ஊடக பணியாளர்களின் நிலைமை மோசமாகி கொண்டு வருவதால், சில மாதங்களுக்கு முன்பு, ஒருசில பத்திரிகையாளர் சங்கங்கள் இணைந்து, ஊடகங்களின் நிலைமை குறித்து ஒரு ஆய்வு நடத்தி அறிக்கையாகவும் வெளியிட்டிருந்தன.. அதில், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, கிட்டத்தட்ட 231 ஊடக நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன.. இதனால் 6,400க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வேலை இழந்துள்ளனர்... 5 பெண் பத்திரிகையாளர்களில் 4 பேருக்கு வேலை இல்ல.. பத்திரிகை தொழிலே அழியும் அபாயத்தில் இருக்கிறது" என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.. தாலிபான்களின் நாளுக்கு நாள் பெரும் இந்த அட்டகாசங்களை பார்த்து, உலக மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை கொண்டுள்ளனர்..!