For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியாவின் இஃப்தார் விருந்தை புறக்கணிக்கும் லாலு… அதே நாளில் அவர் தருகிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பாட்னா: காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியாகாந்தி அளிக்கும் இஃப்தார் விருந்தை ராஷ்டிரியா ஜனதா கட்சித்தலைவர் லாலு பிரசாத் யாதவ் புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதிஷ் குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கடும் அதிர்ச்சியடைந்துள்ள லாலு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆண்டுதோறும் தனது கட்சி நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி நிர்வாகிகளுக்கும் இஃப்தார் விருந்து கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டும் வரும் 13ம் தேதி அன்று இஃப்தார் விருந்து கொடுக்க அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.

சோனியா அழைப்பு

சோனியா அழைப்பு

டெல்லியில் உள்ள பிரபல ஒரு நட்சத்திர ஹோட்டலில், இந்த இஃப்தார் விருந்து கொடுக்க உள்ளார். இந்த விருந்தில், பாஜக தவிர, அனத்து கட்சித் தலைவர்களுக்கும் சோனியா காந்தி அழைப்புவிடுத்துள்ளார். இதற்காக அவர் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் தன் கைப்பட கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

ஒருங்கிணையும் கட்சிகள்

ஒருங்கிணையும் கட்சிகள்

சோனியா காந்தியின் அழைப்பை ஏற்று, சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம்யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிஷ்குமாருக்கு முக்கியத்துவம்

நிதிஷ்குமாருக்கு முக்கியத்துவம்

இந்த நிலையில், அனைத்து ஜனதா தள கட்சிகளும் ஒன்றிணைய முடிவு செய்தன. இந்த அணிக்கு காங்கிரஸ் ஆதரவை தெரிவித்தது. மேலும், நிதிஷ்குமார் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது.

லாலு அதிர்ச்சி

லாலு அதிர்ச்சி

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடும், நிதிஷ் குமாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும், லாலு பிரசாத் யாதவ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இஃதார் விருந்து புறக்கணிப்பு

இஃதார் விருந்து புறக்கணிப்பு

இதனையடுத்து, சோனியா காந்தி ஏற்பாடு செய்துள்ள இஃப்தார் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். மேலும், அதே நாளில் போட்டி இஃப்தார் விருந்து நடந்த லாலுபிரசாத் யாதவ் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
After facing defeat in the Bihar Legislative Council polls, Rashtriya Janata Dal chief Lalu Prasad will not attend the Iftar party organised by Congress President Sonia Gandhi on July 13, said sources on Saturday. The sources added that the RJD supremo has also organised an Iftar party on the same day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X