மசூதியில் ஒலித்த ‛ஆசான்’..ஜம்மு காஷ்மீரில் சட்டென பேச்சை நிறுத்திய அமித்ஷா!கைத்தட்டி மக்கள் ஆரவாரம்
ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியபோது அருகே உள்ள மசூதியில் ஒலித்த ‛ஆசான்' சத்தம் கேட்டு உடனடியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பேச்சை நிறுத்தினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ல் மத்திய அரசு ரத்து செய்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு சட்டசபை தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றார். திங்கட்கிழமை முதல் நேற்று வரை 3 நாள் அமித்ஷா காஷ்மீரில் இருந்தார். அப்போது அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத செயல்களை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பாக அவர் விவாதித்தார்.

அமித்ஷா பேச்சு
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள ஷவ்கத் அலி ஸ்டேடியத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசி கொண்டிருந்தார். அப்போது, அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினார். அப்போது, ‛‛ஜம்மு - காஷ்மீரில் 1990 முதல் பயங்கரவாத செயல்களுக்கு 42 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில் அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒருவர் கூட இல்லை. மோடி அரசு பயங்கரவாதத்தை பொறுத்து கொள்ளாது. ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவை நோக்கி செல்கிறது. விரைவில் முற்றிலுமாக முடிவுக்கு வரும்.

தேர்தல் நடத்த நடவடிக்கை
ஜம்மு - காஷ்மீரை கடந்த 70 ஆண்டுகளாக ஆண்டு வந்த அப்துல்லா, முப்தி மற்றும் காங்கிரஸ் குடும்பத்தினர், பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துமாறு எனக்கு அறிவுரை சொல்கின்றனர். பாகிஸ்தானுடன் இனி பேச்சு கிடையாது. ஆனால், ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் பேச நான் தயாராக உள்ளேன். வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. புதிய வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடன், இங்கு சட்டசபை தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடத்தப்படும். மக்கள் வளர்ச்சி கருத்தில் கொள்ளப்படும்'' என பேசினார்.

பேச்சை நிறுத்திய அமித்ஷா
முன்னதாக அருகே உள்ள மசூதியில் தொழுகை அழைப்புக்காக ‛ஆசான்' சத்தம் கேட்டது. இதையடுத்து அமித்ஷா தனது பேச்சை நிறுத்தினார். தொழுகைக்காக அழைப்பு முடிந்த பிறகு மீண்டும் அமித்ஷா பேச்சை தொடர்ந்தார். பேச்சை தொடர்வதற்கு முன்பு ‛‛இப்போது நான் பேச்சை தொடரலாமா'' என கூட்டத்தை பார்த்து கேட்டார். அவர்கள் பேச்சை தொடரலாம் என கூறிய நிலையில் அமித்ஷா மீண்டும் பேசினார். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் செயலுக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

ராகுலை தொடர்ந்து அமித்ஷா
முன்னதாக பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த மாத இறுதியில் பேசினார். அப்போது மசூதியில் இருந்து இஸ்லாமியர்களை தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து ராகுல்காந்தி தனது பேச்சை நிறுத்தி காத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது அமித்ஷா தொழுகைக்கான அழைப்பையொட்டி தனது பேச்சை நிறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications