Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்தமானின் ரகசிய தீவிற்குள் நுழைந்த நபர்.. 5 நாள் கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்!

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அந்தமான் தீவிற்குள் நுழைந்த நபர், கொடுமைப்படுத்தி கொன்ற சென்டினேலீஸ் ஆதிவாசிகள்!- வீடியோ

    சென்டினல்: அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அந்தமான் தீவுகளில் ஆதிவாசிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மனிதர்களின் வருகையை விரும்பாத அங்கிருந்த ஆதிவாசிகள் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள்.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிறையக் குட்டி குட்டி தீவுகள் உள்ளது. அந்த வகையில் அங்கு இருக்கும் சென்டினல் தீவு மிகவும் பிரபலம். ஆனால் இது சுற்றுலா தலமாகப் பிரபலம் அடையவில்லை.

    அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்களால் பிரபலம் அடைந்து இருக்கிறது. அங்கு இருக்கும் சென்டினேலீஸ் ஆதிவாசி மக்கள் வெளி உலகுடன் எந்த விதமான தொடர்பும் இல்லாமல் இத்தனை வருடங்களாக உயிர் வாழ்ந்து வருகிறார்கள்.

    யார் இந்த சென்டினேலீஸ்

    யார் இந்த சென்டினேலீஸ்

    சென்டினேலீஸ் என்பவர்கள் உலகம் தோன்றியதில் இருந்து வெளி உலக மனிதர்களின் தொடர்பு இல்லாமல் வசிக்கும் மனிதர்கள் இனம் ஆகும். இவர்கள் பேசும் மொழி எது என்று யாருக்கும் தெரியாது. எந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது 50 - 60 சென்டினேலீஸ் மக்கள் அந்த சென்டினல் தீவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே இப்படி

    ஏற்கனவே இப்படி

    சென்டினேலீஸ் மக்கள், தங்கள் தீவிற்குள் வரும் பிற மனிதர்களை விடுதலை செய்ய மாட்டார்கள். அவர்களைக் கைது செய்து கொலை செய்து கடலில் வீசுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு முன்பே இவர்கள் அங்குச் சென்ற மீனவர்கள் சிலர், சில வெளிநாட்டவர்களைக் கொலை செய்து கடலில் வீசி இருக்கிறார்கள். இவர்களுக்கு வெளியுலக மனிதர்களின் தொடர்பு கொஞ்சமும் பிடிக்காது.

    கொலை செய்தனர்

    கொலை செய்தனர்

    இந்த நிலையில்தான் கடந்த வாரம் அந்தத் தீவிற்குள் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஆலன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே அந்தத் தீவிற்குள் சில சமயம் செல்ல முயன்று முடியாத காரணத்தால் பின் வெளியே வந்துள்ளார். இந்த முறை அவர் தீவிற்குள் சென்ற பின் சென்டினேலீஸ் மக்கள் மூலம் சிறை பிடிக்கப்பட்டார்.

    கொடூரமாகக் கொலை

    கொடூரமாகக் கொலை

    கடந்த ஒரு வாரம் முன் சிறைபிடிக்கப்பட்ட அவர் கொடூரமாக கொடுமைப் படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டு இருக்கிறார். இவரது உடல் நேற்று இரவு மீட்கப்பட்டது. இந்தக் கொலையில், அடையாளம் தெரியாத சென்டினேலீஸ் மக்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+