For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியை கடந்து சூரத்தில் பாஜக எப்படி வென்றது தெரியுமா?

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றை கடந்து சூரத்தில் பாஜக வெற்றி பெற பெரிதும் துணை புரிந்திருப்பது பழங்குடியின மக்கள் என்று கூறப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் மீண்டும் பாஜக பெரும்பான்மை பெற முடிந்தது எப்படி?- வீடியோ

    சூரத்: உயர் ரக ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது, ஜிஎஸ்டி அமல்படுத்தியது ஆகிய அதிருப்திகளை கடந்து சூரத்தில் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற உருதுணையாக இருந்திருப்பது பழங்குடியின மக்களின் வாக்குகள் ஆகும்.

    கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாஜக கையில் எடுத்தது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    அதேபோல் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கல் வணிகர்கள் அதிகம் குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஜவுளித் தொழில் பாதிப்பு

    ஜவுளித் தொழில் பாதிப்பு

    காங்கிரஸ் கட்சியினர் குஜராத் மற்றும் ஹிமாச்சல் தேர்தல்களில் பெரும்பாலும் முன்வைத்த விவகாரங்கள் பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும்தான். இவற்றால் குஜராத் மாநிலம் சூரத்தில் வைரம் பட்டை தீட்டும் தொழிலும், ஜவுளித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் வாக்கு வங்கிகள் அதிகம் உள்ள படேல் இனத்தவர், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என பிரிவு மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தந்தனர்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    குஜராத்தில் பழங்குடியினத்தவர்கள் 89 லட்சம் பேர் உள்ளனர். இது மாநில மக்கள்தொகையில் 15 சதவீதம் ஆகும். வதோதரா மாவட்டத்தில் மட்டும் 28 சதவீத பழங்குடியினர் உள்ளனர். அவர்களில் ஜவுளி நகரமான சூரத்தில் 3 சதவீதம் பேர் உள்ளனர். இதை கணக்கு போட்ட பாஜக ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பை தாண்டியும் வெற்றி பெறுவதற்கு பழங்குடியின மக்களை பயன்படுத்திக் கொண்டது.

    கழிப்பறை கூட இல்லை

    கழிப்பறை கூட இல்லை


    பெரும்பாலான பழங்குடியின மக்கள் வாழும் இடங்களில் அடிப்படை வசதிகளான சாலை, தண்ணீர், கழிப்பறை ஆகியன இல்லாமல் அவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். குறைந்த அளவிலான குடிநீர் குழாய்கள் மக்கள் நீண்ட நேரம் நின்று தண்ணீர் பிடித்து செல்லும் நிலை உள்ளது. அவர்களுக்கென வேலையும் இல்லை.
    கூலி வேலைக்காக வாரத்தில் 7 நாட்களும் சென்றால் அதில் 3 நாட்கள் வெறுங்கையோடு திரும்பும் நிலை உள்ளது. தங்களை யாரும் கவனிக்கவில்லை என்ற கோபமும் அந்த மக்களிடம் இருந்தது. இந்த பிரச்சினைகளில் அக்கறை செலுத்தினால் இறங்கி அடிக்க முடியும் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டது.

    என்ன வாக்குறுதிகள்

    என்ன வாக்குறுதிகள்

    பழங்குடியின பகுதிகள் பயன்பெறும் வகையில் சாலை வசதிகளை செய்து தர பாஜக உறுதி அளித்துள்ளது. எந்த ஆட்சியிலும் தாங்கள் கைவிடப்படுவதாகவே கருதும் பழங்குடியின மக்களுக்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறியிருந்திருக்கலாம் என்றும் இந்த வாக்கு வங்கியும் சூரத்தில் பாஜக வெற்றி பெற காரணமாக அமைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

    English summary
    Despite Demonetisation and GST jitters, there is another one apart from these are tribals voting in Surat.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X