For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா பதவி விலக மத்திய அரசு உத்தரவு?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவாவை பதவி விலக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அருணாசலபிரதேச ஆளுநராக ஜோதிபிரகாஷ் ராஜ்கோவா, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அங்கு நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

Arunachal Governor reportedly asked to step down

தற்போது ராஜ்கோவா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதனால், புதிய முதல்வர் பீமா காண்டு பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராஜ்கோவாவை பதவி விலகுமாறு மத்திய அரசு தரப்பில் வாய்மொழியாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் யாரிடம் இருந்தும் அதிகாரபூர்வ உத்தரவு வரவில்லை என்று ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆளுநர் ராஜ்கோவா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாகவும், அப்போது பதவி விலகுமாறு ராஜ்நாத்சிங் கோரவில்லை என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில் ராஜ்கோவா பதவி விலக மறுத்தால் அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது,

English summary
Arunachal Pradesh Governor Jyoti Prakash Rajkhowa has been reportedly asked to step down from his post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X