For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீண்ட போராட்டத்துக்குப் பின் 'சீட்' பெற்ற நக்மா...!

Google Oneindia Tamil News

டெல்லி: நீண்ட காலமாகவே அரசியல் ஆர்வத்துடன் பல்வேறு வழிகளில் அரசியலில் ஈடுபட்டு வந்த நடிகை நக்மாவுக்கு ஒரு வழியாக தற்போது காங்கிரஸ் கட்சியில் சீட் கிடைத்துள்ளது. அவர் மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எம்.பி. தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

40 வயதாகும் நக்மா முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இணைந்தது முதலே அவர் பல தேர்தல்களில் சீட் கேட்டு வந்தார். இருப்பினும் அது அவருக்குக் கை கூடாமலேயே இருந்து வந்தது. தற்போது அவருக்கு சீட் கொடுத்துள்ளனர்.

மும்மதத்துடன் தொடர்புடைய நக்மா

மும்மதத்துடன் தொடர்புடைய நக்மா

நக்மா, இந்தியாவின் மூன்று முக்கிய மதங்களான இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர். அவரது தந்தை ஒரு இந்து, தாயார் இஸ்லாமியர். அவர் பிறந்தது 1974ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் தினத்தன்று.

நடிகையாக பிரபலம்

நடிகையாக பிரபலம்

நடிகையாக பிரபலமானவர் நக்மா. இந்தி, தெலுங்கு, தமிழ், போஜ்புரி, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

ரஜினி - சரத் - கார்த்திக்

ரஜினி - சரத் - கார்த்திக்

தமிழில் இவர் நடித்த முதல் படம் காதலன். அதில் பிரபுதேவாவுடன் இணைந்து நடித்தார். இணைத்தும் பேசப்பட்டார். பின்னர் ரஜினியின் பாட்ஷா படம்தான் இவரை பிரபலமாக்கியது. தொடர்ந்து சரத்குமாருடன் நிறையப் படங்களில் நடித்து கிசுகிசுக்களில் சிக்கினார். அதேபோல கார்த்திக்குடனும் சில படங்களில் நடித்துள்ளார்.

அஜீத்துடன் கடைசியாக

அஜீத்துடன் கடைசியாக

கடைசியாக இவர் தமிழில் அஜீத்துடன்தான் நடித்திருந்தார். சிட்டிசன் படம் தான் இவரது கடைசிப் படமாக மாறியது. அதில் சிபிஐ அதிகாரியாக இவர் நடித்திருந்தார். அதேபோல தீனா படத்திலும் அஜீத்துடன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

ஜோதிகாவின் அக்காள்

ஜோதிகாவின் அக்காள்

நடிகை ஜோதிகாவின் மூத்த சகோதரிதான் நக்மா. அதாவது ஜோதிகா, நக்மாவுக்கு தந்தை ஒருவர், தாயார் இருவர்.

ராஜீவ் காந்தி பற்றாளர்

ராஜீவ் காந்தி பற்றாளர்

நீண்ட காலமாகவே காங்கிரஸ் மீது பற்று கொண்டிருந்தவர் நக்மா. குறிப்பாக ராஜீவ் காந்தி மீது தீவிர அபிமானம் கொண்டவர். இதனால்தான் அவர் காங்கிரஸில் இணைந்தார்.

2 முறை சீட் கேட்டு ஏமாற்றம்

2 முறை சீட் கேட்டு ஏமாற்றம்

மகாராஷ்டிராவில் விலாஸ் ராவ் தேஷ்முக் மரணமடைந்தபோது காலியான ராஜ்யசபா இடத்தில் போட்டியிட ஆர்வம் காட்டியிருந்தார் நக்மா, சீட்டும் கேட்டிருந்தார். ஆனால் காங்கிரஸ் சீட் தரவில்லை. அதேபோல, 2009 லோக்சபா தேர்தலின்போதும் உ.பியில் போட்டியிட சீட் கேட்டார். அப்போதும் கிடைக்கவில்லை. இதனால் வெளிப்படையாக தனது அதிருப்தி மற்றும் ஏமாற்றத்தை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

உ.பியில் தீவிர ஏற்பாடுகள்

உ.பியில் தீவிர ஏற்பாடுகள்

இந்த நிலையில் இந்தத் தேர்தலி்ல எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு உ.பி.யில் பல இடங்களிலும் சுற்றிச் சுற்றி காங்கிரஸுக்காக உழைத்து வந்தார். அதற்கு கை மேல் பலனாக மீரட்டில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பார்க்கலாம்.. நடிகை நக்மா.. எம்.பி. நக்மா ஆவாரா என்று!

English summary
Actress Nagma was working for the Congress for a long time, but she has been recognized by the party now only. Nagma has been given ticket to contest in LS polls from Meerut, a constituency in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X