மோசமான பெண்கள்தான் படுக்கைக்கு போவார்கள்.. கேரள எம்பியின் பேச்சால் சர்ச்சை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மோசமான பெண்கள் படுக்கைக்கு போவார்கள் என கேரள எம்பியும் நடிகருமான இன்னொசன்ட் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் இன்னொசன்ட் மலையாளத்தில் பிரபலமான காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ஆவார். மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டோருடன் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாள நடிகர் சங்கமான அம்மாவின் தலைவராகவும் உள்ளார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

சுத்தமாக உள்ளது

சுத்தமாக உள்ளது

72 வயதான அவரிடம் மலையாள திரைத்துறை குறித்தும் நடிகைகளுக்கான பாதுகாப்பு குறித்தும் அண்மையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இன்னொசன்ட் மலையாள திரைத்துறை தற்போது சுத்தமாக உள்ளது என்றார்.

 மோசமான பெண்கள்

மோசமான பெண்கள்

வாய்ப்புக்காக படுக்கைக்கு போகும் சம்பவங்கள ஏதும் இல்லை. மலையாளதிரைத்துறை கடந்த ஆண்டுகளைப் போல் இல்லை என்றார்.பெண்களுக்கு எதிரான சம்பங்கள் ஏதும் நடைபெற்றால் உடனடியாக அது மீடியாவுக்கு தெரிந்துவிடும் என்றார். அதேநேரத்தில் மோசமான பெண்கள் படுக்கைக்கு போவார்கள் என்றும் நடிகரும் எம்பியுமான இன்னொசன்ட் கூறினார்.

 இன்னொசன்ட் பேச்சுக்கு எதிர்ப்பு

இன்னொசன்ட் பேச்சுக்கு எதிர்ப்பு

அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சினிமா பெண்கள் கூட்டமைப்பு, திரைத்துறையில் பெண்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்துள்ளது. புதுமுகங்கள் திரைத்துறைக்கு வரும் போது பல விதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளது.

 இளம் நடிகைகளுக்கு தொல்லை

இளம் நடிகைகளுக்கு தொல்லை

இளம்நடிகைகளான பார்வதி, லட்சுமி ராய் உள்ளிட்டோர் இதுகுறித்து பேசியிருப்பதாக கூறியுள்ள அந்த அமைப்பு, திரைத்துறையில் பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது. மேலும் பொது இடங்களில் அறிக்கை விடும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

 தான் அவ்வாறு கூறவில்லை

தான் அவ்வாறு கூறவில்லை

தனது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது கருத்து மீடியாக்களில் தவறாக வெளியிடப்பட்டிருப்பதாக இன்னொசன்ட் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தான் அவ்வாறு கூறவில்லை என்றும் திரைத்துறையும் சுற்றுச்சூழலும் முன்பை விட தற்போது பெண்களுக்கு சாதகமாக இருப்பதாக கூறினார். மேலும் பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மலையாள நடிகர் சங்கம் எப்போதும் எதிராகவே இருக்கும் என்றும் அவர் கூறிறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kerala MP and actor Innocent said that Bad women may go to bed. This speech created shock in the malayala film industry.
Please Wait while comments are loading...