For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒடிஸாவில் கரடி தாக்கி 3 பேர் பலி... பீதியில் பொதுமக்கள்

Google Oneindia Tamil News

புவவேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கரடி தாக்கியதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

Bear attack kills three in Odisha

ஒடிசா மாநிலம், நபராங்பூர் மாவட்டத்தில் வனப்குதியையொட்டி போதாகி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 5 பேர் நேற்று விறகு சேகரிப்பதற்காக அங்குள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது, வனப்பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு கரடிகள் இவர்களை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் கரடி தாக்குதலில் இருந்து 2 பேர் தப்பித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் காயங்களுடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வனப்பகுதியையொட்டிய பகுதிகளில் சுற்றி கரடி சுற்றித்திரியலாம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. விறகு சேகரிக்கச் சென்றவர்கள், கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Three persons, including a woman, were killed and two others injured when wild bears attacked them in Odisha’s Nabarangpur district, officials said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X