விறுவிறுவென முன்னேறும் பாஜக.. கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கர்நாடக சட்டசபை தேர்தலில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு

  பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில், தனிப்பெரும்பான்மை பலத்துடன் பாஜக ஆட்சியமைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

  பாஜக-காங்கிரஸ் நடுவேயான முன்னிலை நிலவரத்தில் பெரும் இடைவெளி உருவாகியுள்ளது. முதலில் இரு கட்சிகளும் சம பலத்துடன் மோதிவந்த நிலையில், 9.30 மணி நிலவரப்படி, பாஜக 100 தொகுதிகளிலும், காங்கிரஸ் 64 தொகுதிகளிலும் முன்னிலை என்ற நிலை உருவாகியிருந்தது.

  BJP leading many seats in Karnataka

  இந்த இடைவெளி அதிகரித்தது. 10.30 மணி நிலவரப்படி 112 தொகுதிகளில், பாஜக முன்னிலை வகித்தது. 222 தொகுதிகளில்தான் தேர்தல் நடைபெற்றது என்பதால் பாஜக, 112 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தனிப்பெரும்பான்மை பெற்றுவிடலாம். அந்த நிலைக்கு பாஜக வந்தாகிவிட்டது.

  மஜதவை பொறுத்தளவில் அது காங்கிரசின் ஓட்டுக்களில்தான் ஓட்டை போட்டுள்ளது. சுமார் 44 தொகுதிகளில் மஜத முன்னிலையில் உள்ளது. 64 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

  டிரெண்ட் இதபோல நீடித்தால், கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும். இருப்பினும் நிலைமை மாறுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP leading many seats in Karnataka than Congress now.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற