For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூரில் சரித்திரம்.... 2 சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. அதிரடி வெற்றி!!

By Mathi
Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூரில் நடைபெற்ற 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியே வென்று அம்மாநில சட்டசபைக்குள் அதிரடியாக நுழைந்துள்ளது. 2 தொகுதிகளும் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

மணிப்பூரில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் அண்மைக்காலமாக பாரதிய ஜனதாவில் அடைக்கலமாகி வர அக்கட்சிக்கு புது தெம்பு கிடைத்தது.

இந்நிலையில் தங்மெயிபந்த் மற்றும் தொங்ஜியூ சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவியது.

இன்று இத்தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. தங்மெயிபந்த் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் ஜோயிகிஷான் 11,772 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 1,889 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.

இதேபோல் தொங்ஜியூ தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் பிஸ்வஜித் சிங், 13,213 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 3,047 வாக்குகள் அதிகம் பெற்றார்.

இந்த வெற்றி மூலம் மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க.வும் வென்று சரித்திரம் படைத்துள்ளது. மணிப்பூர் சட்டசபையில் முதல் முறையாக 2 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் இடம்பெற்றுள்ளது அம்மாநில ஆளும் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவாகும்.

English summary
The BJP made its electoral debut in the Manipur assembly, winning both by-elections in the north eastern state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X