For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகண்டில் மலர்கிறது "தாமரை".... ஓய்கிறது காங்கிரஸ்!

உத்தரகண்டில் பாஜக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன.காங்கிரஸ் அங்கு ஆட்சியைப் பறி கொடுக்கிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டேராடூன்: புனித தலங்களை கொண்டுள்ள உத்தரகண்டில் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரம் ஆகிறது. பண மதிப்பிழப்பு, ஊழல் புகார்களுக்கு மத்தியில் பாஜக 5 மாநிலங்களில் தேர்தலை சந்தித்துள்ளது.

BJP seems to win in Uttarkhand

இந்நிலையில் பணமதிப்பிழப்பு, பணத்தட்டுப்பாடு, ஊழல் புகார் ஆகியவற்றை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் உற்சாகத்துடன் போட்டியிட்டது.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை பார்க்கும்போது பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்பது கண்கூடாக தெரிகிறது. முன்னிலை நிலவரங்களில் பாஜக முன்னிலை வகிக்கும் இடங்களில் பாதி இடங்களில் கூட காங்கிரஸ் லீடிங்கில் இல்லை.

இதனால் கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசின் நடவடிக்கைக்கு உத்தரகண்ட் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

English summary
The BJP is going to win in Uttarkhand election 2017. It shows people accept the demonetisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X