For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டணியால் அதிருப்தி.. காங்., மஜதவில் பல எம்எல்ஏக்கள் பாஜக பக்கம்.. ஈஸ்வரப்பா பரபர பேட்டி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா

    பெங்களூர்: காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி 222 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற்ற (2 தொகுதிகளுக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது) தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளை வென்றுள்ளது.

    BJP trying to woo Congress and JDS MLAs

    காங்கிரஸ் 78, மஜத 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்க காங்கிரஸ்-மஜத நேற்றே கூட்டணியை முடிவு செய்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் அனுமதி கோரின.

    இந்த நிலையில், பாஜக எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா கூறுகையில், காங்கிரஸ் மற்றும் மஜத அமைத்துள்ள கூட்டணிக்கு அவ்விரு கட்சிகளிலும் உள்ள பல எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் பாஜக தலைவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதன் மூலம், இரு கட்சி எம்எல்ஏக்களையும் கவர பாஜக முயல்வதையும், அதற்கு காரணமாக, கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக ஈஸ்வரப்பா கூறுவதையும் அரசியல் பார்வையாளர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரிசார்ட் அரசியலுக்கு குதிரை பேரம் தூபம் போட்டுள்ளது.

    English summary
    BJP trying to woo Congress and JDS MLAs, as Eswarappa press meet reveals the plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X