For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி நாளை பிரேசில் பயணம்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இதன் உச்சி மாநாடு 14, 15-ந் தேதிகளில் பிரேசிலில் நடைபெற உள்ளது.

BRICS summit: Narendra Modi leaves for Brazil on Sunday

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை பிரதமர் மோடி பிரேசில் பயணம் மேற்கொள்கிறார். பிரேசில் செல்லும் வழியில் ஜெர்மன் அதிபர் ஏஞ்செலாவை பிரதமர் மோடி சந்திப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் ஜெர்மனி விளையாடுவதால் அந்நாட்டு அதிபர் அங்கு செல்கிறார். இதனால் ஜெர்மனி அதிபருடனான சந்திப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசலர் ஏ.கே. தோவல், வெளியுறவுத் துறை செயலர் சுஜாதாசிங், நிதித்துறை செயலர் அரவிந்த் மாயாராம் ஆகியோருடம் பிரேசில் செல்கின்றனர்.

English summary
Prime Minister Narendra Modi leaves on Sunday for Brazil for attending the five-nation summit of BRICS nations on July 14 and 15 which is expected to finalise the setting up of a development bank and seek reforms of the United Nations and international financial organisations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X