For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரி வெளியில் இல்லை உள்ளே தான்: கேப்டன் கோபிநாத்

By Siva
Google Oneindia Tamil News

Captain Gopinath flays AAP decision on FDI in retail
பெங்களூர்: டெல்லியில் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வாபஸ் பெறப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சி அபாயத்தில் உள்ளது என்று அந்த கட்சியில் அண்மையில் சேர்ந்த கேப்டன் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்கி வந்த ஏர் டெக்கானின் நிறுவனரான கேப்டன் கோபிநாத் அண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில் டெல்லியில் சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வாபஸ் பெறப்பட்டது குறித்து கோபிநாத் கூறுகையில்,

பொருளாதாரக் கொள்கைகளில் இந்தியா ஒரு நிலையில்லாத நாடு என்ற தவறான தகவலை இந்த முடிவு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கும். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி பின் வாங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவசரப்பட்டு எதையும் செய்யக் கூடாது. அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நம் விவசாயிகளுக்கு நல்லது. மேலும் நமது நாட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் நல்லது.

அரசியலுக்கு புதிய அர்த்தம் கொண்டு வந்தது ஆம் ஆத்மி கட்சி. தேர்தலில் பணம், சாதி பலம் இல்லாமல் போட்டியிட முடியும் என்பதை அது காண்பித்தது. இது தான் இந்திய அரசியலுக்கு அவர்கள் செய்த மிகப்பெரிய நல்ல விஷயம். ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரி வெளியில் இல்லை உள்ளே தான் இருக்கிறார்கள் என்றார்.

English summary
In ideological discordant notes within the Aam Aadmi Party, Captain Gopinath, pioneer of the low-cost airline business, today slammed the decision of AAP government in Delhi to reject FDI in retail, saying the party is "running in danger" of being branded like other parties of resorting to cheap and populist measures.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X