For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ திடீர் வழக்குப் பதிவு! 12 இடங்களில் அதிரடி சோதனை

லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ திடீரென முறைகேடு வழக்குப் பதிவு செய்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் ரயில்வே அமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் மீது சிபிஐ திடீர் வழக்குப் பதிவு செய்துள்ளது. அத்துடன் லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

2006-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தார் லாலு பிரசாத் யாதவ். அவர் அமைச்சராக இருந்த காலத்தில்தான் ரயில்வே துறை லாபகரமாக இயங்கியதாக கூறப்படுகிறது.

CBI registers a case against Lalu Prasad Yadav

தற்போது திடீரென ரயில்வே அமைச்சராக லாலு இருந்தபோது ஹோட்டல்களுக்கு டெண்டர்கள் விட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

அத்துடன் டெல்லி, பாட்னா, ராஞ்சி, புரி உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

English summary
CBI registers a case against then Railway Minister Lalu Prasad Yadav on allegations of awarding tender for hotels in Ranchi and Puri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X