அந்த நாலு வார்த்தையை தூக்க சொல்லும் தணிக்கை குழு.. அமர்தியா சென் ஆவணப்படத்தில் அப்படி என்ன இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: நோபல் விருது பெற்ற பொருளாதார மேதையான அமர்தியா சென் தொடர்பான ஆவணப்படத்தை கொல்கத்தாவைச் சேர்ந்த இயக்குனர் சுமன் கோஷ் என்பவர் இயக்கினார். இந்த படம் இரண்டு பாகங்களாக கடந்த 2002 மற்றும் 2017ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில் இந்திய நாடு பொருளாதார ரீதியாக சந்தித்து வரும் பிரச்சனைகள், ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து அமர்தியா சென் விளக்குவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த கொல்கத்தா தணிக்கை குழுவினர் இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

Censor board wants to remove the word Gujarat from Amartya sen documentary.

படத்தின் இயக்குனர் விடாப்பிடியாக காரணங்களை கேட்டதற்கு, படத்தில் பசு, இந்து, இந்துத்துவா, குஜராத் போன்ற வார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அவற்றை நீக்கினால் தான் அனுமதியளிக்கப்படும் என தணிக்கை குழு சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த இயக்குனர், அந்த வார்த்தைகளை நீக்க முடியாது என்று கடந்த ஒரு வருடமாக அதற்காக போராடி வந்தார். இந்நிலையில், சென்சார்போர்டு தலைவர் பிரசூன் ஜோஷி இந்த படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட்டு அனுமதியளிப்பதாக இயக்குனர் சுமன் கோஷிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தணிக்கை குழுவிடமிருந்து சுமனுக்கு வந்த கடிதம் ஒன்றில், படத்தில் குறிப்பிட்ட அந்த மூன்று வார்த்தைகள் இருப்பதில் பிரச்சனையில்லை என்றும், குஜராத் என்ற வார்த்தையை மட்டும் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்றும், அதன் பின் தான் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்ற இயக்குனர் சுமன் கோஷ் விரைவில் சென்சார் போர்டுக்கு இதுதொடர்பான பதில் கடிதம் அனுப்புவேன் என்று கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Central Board of Film Certification, however, had agreed to retain the other three words that its regional office had objected to in July last year, he added.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X