For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானப் பணிக்கு ரூ 19,000 கோடி நிதி ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

டெல்லி: கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் புதுப்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வரும் இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தின் கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு ரூ. 19,000 கோடி நிதியை ஒதுக்கவுள்ளது.

இந்த விமானம் தாங்கிக் கப்பலானது 1961ம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து வாங்கப்பட்டதாகும். 1997ம் ஆண்டு இது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டது.

தற்போது இதைப் புதுப்பித்து மீண்டும் கடற்படையில் சேர்க்க பாதுகாப்புத்துறை முடிவெடுத்துள்ளது. 260 மீட்டர் நீளம் கொண்ட விக்ராந்த் கப்பலை புதுப்பித்து மீண்டும் கடற்படையில் சேர்க்க 2003ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் நிதி ஒதுக்கீட்டில் தாமதம் காரணமாக புதுப்பிக்கும் பணிகள் தாமதமாகி வந்தன.

புதுப்பிக்கும் பணி...

புதுப்பிக்கும் பணி...

விக்ராந்த் புதுப்பிக்கும் பணியில் இதுவரை நீருக்கு அடியில் இருந்து செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் முடிந்து விட்டன. கப்பலின் மேல் பகுதி, கேபிள், சென்சார்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பணிகள் மட்டுமே பாக்கி உள்ளனவாம்.

தேவையான உபகரணங்கள்...

தேவையான உபகரணங்கள்...

இதற்கான சாதனங்களுக்கு ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த கப்பலில் அமெரிக்காவின் எல்எம் 2500 காஸ் டர்பைன்கள் பயன்படுத்தப்படும்.

44,400 டன் எடை...

44,400 டன் எடை...

முன்னதாக கடந்த ஜூன் 14ம் தேதி இந்தியாவின் செகண்ட் ஹேண்ட் ரஷ்ய விமானம் தாங்கிப் போர்க் கப்பலான அட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க் கப்பலை பல மணி நேரம் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார். ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராமாதித்யா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 44,400 டன் எடை கொண்டதாகும்.

ஒப்புதல்...

ஒப்புதல்...

இதுகுறித்து பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், இந்த வார இறுதியில் பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு கூடி இதுதொடர்பாக விவாதிக்கவுள்ளது. அனேகமாக இன்றே கூட இந்தக் கூட்டம் நடைபெறலாம். அப்போது விக்ராந்த் கப்பலின் 2வது மற்றும் 3வது கட்ட கட்டுமானத்திற்கு ரூ. 19,000 நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

தேவை...

தேவை...

40,000 டன் எடை கொண்ட இந்தியாவின் பிரமாண்ட விமானம் தாங்கி போர்க் கப்பல்தான் விக்ராந்த். தற்போதைய நிலையில் இந்த விமானத்தைக் கட்டி முடிக்க ரூ. 20,000 கோடி தேவைப்படும் என்று தெரிகிறது.

45 மிக் 29கே போர் விமானங்கள்...

45 மிக் 29கே போர் விமானங்கள்...

விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் ஆகிய இரு போர்க்கப்பல்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையிலான 45 மிக் 29கே போர் விமானங்களையும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விராத்...

விராத்...

இந்தியாவிடம் இந்த இரு போர்க் கப்பல்களைத் தவிர 28,000 டன் எடை கொண்ட ஐஎன்எஸ் விராத் போர்க்கப்பலும் உள்ளது. ஆனால் இது 55 ஆண்டு அறுதப் பழசானது ஆகும்.

இந்தியாவும்....

இந்தியாவும்....

விமானம் தாங்கிப் போர்க் கப்பல்களை வைத்துள்ள அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த இலக்கு...

அடுத்த இலக்கு...

அடுத்து இந்தியா, 60,000 டன் எடை கொண்ட அணு ஆயுதங்களையும் கையாளக் கூடிய திறன் படைத்த விமானம் தாங்கிப் போர்க் கப்பலுக்கு திட்டமிட்டு வருகிறது.

நிமிட்ஸ்...

நிமிட்ஸ்...

இதுபோன்ற கப்பல்கள் அமெரிக்காவிடம் 11 உள்ளன. அதில் முக்கியமானது நிமி்ட்ஸ் கப்பலாகும். இது 94,000 டன் எடை கொண்டது. இதில் 80 முதல் 90 போர் விமானங்களை நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Defence ministry sources say the Cabinet Committee on Security (CCS) is slated to meet this week, probably on Wednesday itself, to approve the allocation of around Rs 19,000 crore for the Phase-II and III building of the 40,000-tonne indigenous aircraft carrier (IAC).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X