ஐபிஎல் பெட்டிங்: குருநாத் மெய்யப்பன் வழக்கில் 11,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Chargesheet filed in IPL betting case
மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது பெட்டிங்கில் ஈடுபட்ட வழக்கில் 11,500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது பிக்சிங்கில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர்கள் சிக்கினர். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனும் சிக்கி சிறைக்குப் போனார். இதனால் குருநாத் மெய்யப்பனின் மாமனாரும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருமான சீனிவாசனுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பின்னர் குருநாத் மெய்யப்பன் ஜாமீனில் வெளியே வந்தார். இன்று இந்த வழக்கில் மும்பை போலீசார் 11,500 பக்க குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் மீது 11,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் மும்பை காவல்துறை தாக்கல் செய்தது. இதில் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்பாட் பிக்சிங்கில் அவர் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

இந்த குற்றப் பத்திரிகையில் நடிகர் விண்டூ தாராசிங் உட்பட 20 பேர் பெயர் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Mumbai police on Saturday filed the chargesheet of the IPL betting case. Chargesheet in IPL betting case states Gurunath Meiyappan was involved in betting. No spot-fixing charges against him.
Please Wait while comments are loading...