மே 23-இல் குமாரசாமி பதவியேற்பு... யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?... துணை முதல்வர் யார்?
பெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி வரும் மே 23-இல் பதவியேற்க முடிவு செய்துள்ளார். அவரது உத்தேச அமைச்சரவைப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியல் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடக மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பல்வேறு திருப்புமுனைகள் ஏற்பட்டது. அதை தொடர்ந்து எண்ணிக்கையின் அடிப்படையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் ஏற்கெனவே பேசி வைத்தபடி காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணியின் சார்பில் முதல்வராக அறிவிக்கப்பட்ட குமாரசாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அவர் வரும் 23-இல் பதவியேற்க திட்டமிட்டுள்ளார். யார் யாருக்கு அமைச்சரவையில் இடம் என்பது தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இது உத்தேசப் பட்டியல் என்ற போதிலும் இவை ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
- எச். டி. குமாரசாமி- முதல்வர், நிதி
- ஜி. பரமேஸ்வர்- துணை முதல்வர் மற்றும் உள்துறை
- விஸ்வநாத் (ஜேடிஎஸ்)- கல்வி
- சி.எஸ். புட்டராஜு (ஜேடிஎஸ்)- விவசாயம்
- எச்.டி. ரேவண்ணா (ஜேடிஎஸ்)- பொதுப் பணித் துறை
- கேஜி ஜார்ஜ் - பெங்களூர் வளர்ச்சி துறை
- எம் கிருஷ்ணப்பா - விளையாட்டு துறை
- கிருஷ்ண பைரே கௌடா- தகவல் மற்றும் விளம்பரத் துறை
- என். மகேஷ் (ஜேடிஎஸ்)- சமூக நலன்
- ஜிடி தேவகௌடா (ஜேடிஎஸ்)- கூட்டுறவு துறை
- பண்டேப்பா கஷேம்பூர் (ஜேடிஎஸ்)- ஜவுளி மற்றும் அறநிலையத் துறை
- டிசி தம்மண்ணா (ஜேடிஎஸ்)- தொழிலாளர் நலன்
- தினேஷ் குண்டு ராவ்- கலால் வரி
- யூ.டி. காதர் - சுகாதாரம்
- தன்வீர் சையது - உயர்கல்வி துறை
- ரோஷன் பைக் - வனத்துறை
- எம் டி பாட்டில்- உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகம்
- ஆர்வி தேஷ்பாண்டே- சட்டம் மற்றும் சட்டசபை விவகாரங்கள் துறை
- சதீஷ் ஜர்கிஹோலி - சிறு தொழில் மற்றும் சர்க்கரை ஆலை
- அஜய் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
- எஸ் சிவசங்கரப்பா- வருவாய் துறை
- ராமலிங்க ரெட்டி - போக்குவரத்து
- ஏ.டி. ராமசாமி (ஜேடிஎஸ்)- தொழில் துறை
- ஆர் நரேந்திரா - கால்நடை