2014 தேர்தல் பிரச்சார தொனியிலேயே பேசும் மோடி.. நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குஜராத்தில் பேச்சு
காந்திநகர்: காங்கிரஸ் கட்சியின் சாதிவெறி, மதவெறி, குடும்ப அரசியல் மாடலால் குஜராத் மட்டுமின்றி நாடே அழிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
வடக்கு குஜராத் பகுதியில் அமைந்து இருக்கும் மெஹ்சானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் மாடல் என்பது, குடும்ப அரசியல், ஊழல், சாதி வெறி, மத வெறி, வாங்கி வங்கி அரசியல் ஆகியவை தான் என்றார்.

காங்கிரஸ்தான் காரணம்
அவர் தனது உரையில், "தங்கள் வாக்கு வங்கி அரசியலை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் வேலை. காங்கிரஸ் கட்சியின் இந்த மாடல் குஜராத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதையும் அழித்துவிட்டது.

தொடர் பிரச்சாரம்
அதன் காரணமாகவே நாங்கள் கடினமாக உழைத்து நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினோம்." என்றார். குஜராத்தில் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து தாஹோத், வதோதரா, பாவ்நகர் பகுதிகளிலும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்.

குஜராத் அரசு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்து வருகிறது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்த குஜராத் பாஜக அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது.

சட்டசபைத் தேர்தல்
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் குஜராத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

பாஜகவின் டார்கெட்
டிசம்பர் 8 ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்துடன் சேர்த்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

முழு பலம்
இதற்காக தனது மொத்த பலத்தையும் குஜராத் மாநிலத்தில் இறக்கி உள்ளது அக்கட்சி. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அம்மாநிலத்தில் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அல்லாமல் மத்திய கேபினட் அமைச்சர்கள், பிற மாநில முதலமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாதனையை நெருங்கும் பாஜக
இதனால் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி இதில் நெருக்கடி கொடுக்கும் என்று கணிப்புகள் வெளியானாலும், பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதிலும் அடுத்த தேர்தலிலும் பாஜக வெல்லும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது முன்னணியின் சாதனையை பாஜக முறியடிக்கும்.
-
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்?












Click it and Unblock the Notifications