For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிவினையை உண்டாக்கும் காங்கிரஸ்-பாஜகவின் முக்தார் பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: தேர்தலைப் பயன்படுத்தி பிரிவினைவாத சூழலை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலில் பிரிவினைவாத சூழலை உருவாக்க காங்கிரஸ் முயல்கிறது என பாரதீய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸின் செயல்பாடுகளை எப்போதுமே மக்களின் ஒற்றுமையை குலைக்கும் வகையிலேயே அமையும் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, " பாபர் மசூதி இடிப்பு தொடர்பான விசயங்களையும், அதில் தொடர்பு கொண்டிருந்த தலைவர்கள் பற்றிய செய்திகளையும் நாங்கள் தெளிவுப்படுத்தியுள்ளோம்.

நாட்டில் இனவாதத்தை காங்கிரஸ் புகுத்துகிறது என தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளேன்.மதவாத சக்திக்களை தூண்டிவிட்டு மக்களிடையே வேற்றுமையை உண்டாக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இது மிகப்பெரிய தேச துரோக செயல். இதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம்" என கூறினார்.

English summary
BJP’s Mukthar appas nakvi says that congress trying to made partition between people using the election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X