For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆம் ஆத்மி அமைச்சர்களுக்கு இலாகா அறிவிப்பு: கெஜ்ரிவால் பொறுப்பில் 4 துறைகள்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகாக்களை அறிவித்துள்ளார்.

ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் ஒரு பெண் உட்பட 6 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த நிலையில், ஒவ்வொருவரின் இலாகாக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவையாவன....

உள்துறை, நிதி....

உள்துறை, நிதி....

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை, நிதி, ஊழல் கண்காணிப்பு, மின் திட்டம், சேவைகள் துறைகளை தன் வசம் வைத்துக்கொள்கிறார்.

பொதுப்பணித்துறை....

பொதுப்பணித்துறை....

மனிஷ் சிசோதயா, கல்வி, பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறைகளை கவனித்துக் கொள்கிறார்.

சுற்றுலாத்துறை...

சுற்றுலாத்துறை...

சோம்நாத் பார்தி, நிர்வாக சீர்திருத்தம், சட்டம், சுற்றுலா, கலை, கலாச்சாரம் ஆகிய துறைகள் அமைச்சராகிறார்.

சுற்றுச்சூழல் துறை...

சுற்றுச்சூழல் துறை...

சவுரவ் பரத்வாஜ் போக்குவரத்து, உணவு வழங்கல், சுற்றுச்சூழல் துறையையும், ராக்கி பிர்லா மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையையும் கவனித்துக் கொள்கின்றனர்.

சுகாதாரம்...

சுகாதாரம்...

கிரிஷ் சோனி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின துறையை கவனித்துக் கொள்கின்றனர். அமைச்சர் சத்யேந்திரா ஜெயின், சுகாதாரம், தொழிற்சாலை துறைகளை கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The following are the portfolios of Delhi's new Chief Minister Arvind Kejriwal and his cabinet of six ministers. Arvind Kejriwal: Power and Finance, Manish Sisodia: PWD/UD and Education, Saurabh Bhardwaj: Transport, Rakhi Birla: Women and Child Welfare, Satenyendra Jain: Health.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X