For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரண்டே மாதத்தில் 250 கிலோ எடை குறைத்த குண்டு பெண், ஆனால் இனிமேல்...

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: எகிப்தை சேர்ந்த குண்டு பெண் இமான் அகமது 2 மாதங்களில் 250 கிலோ எடையை குறைத்துள்ள போதிலும் இனி அவரால் நடக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் உள்ள அலெக்சாண்ட்ரியா பகுதியை சேர்ந்தவர் இமான் அகமது(36). 500 கிலோ எடையுடன் உலகின் குண்டு பெண்ணாக அறியப்பட்டவர். உடல் எடை பிரச்சனையால் படுத்த படுக்கையாக இருந்த அவர் கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சைக்காக மும்பை வந்தார்.

மும்பையில் உள்ள சைபீ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

எடை

எடை

இந்தியாவுக்கு வந்த இரண்டே மாதங்களில் இமான் 250 கிலோ எடையை குறைத்துள்ளார். சிறப்பு பிரிவில் இருந்த இமான் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கால்கள்

கால்கள்

இமானுக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் முபஸ்ஸால் லக்தாவாலா கூறுகையில், இமானால் உட்கார முடியும், அவரது தைராய்டு அளவு சரியாக உள்ளது. ஆனால் இனி அவரால் நடக்க முடியாது என்றார்.

வாதம்

வாதம்

இமானுக்கு 11 வயது இருக்கும்போது ஏற்பட்ட வாதத்தால் அவரது கால்கள் வளர்ச்சி அடையவில்லை. உடல் எடை காரணமாக இமான் கடந்த 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்ததால் நிலைமை மோசமாகிவிட்டது என்றார் டாக்டர் முபஸ்ஸால்.

நரம்பு

நரம்பு

இமானுக்கு நரம்பு தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இமானை 4 மாதங்களில் அவரின் நாட்டிற்கு திருப்பி அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Though Egypt's Eman Ahmed has lost 250 kilos in two months, she won't be able to walk again. She was weighed 500 kilos and known as world's heaviest woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X