அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்கும் இந்தியா.. ஈரானிடம் பெட்ரோல் வாங்குவதை தவிர்க்க முடிவு
அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அணு ஆயுதம் வைத்து இருப்பதாக கூறி, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யாது.

இந்த நிலையில் ஈரானில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இப்போது அறிக்கை சென்றுள்ளது.
இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது, ஈரானில் இருந்து படிப்படியாக பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது.
விரைவில் மொத்தமாக பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சவுதி, குவைத் நாடுகளில் இருந்து பெட்ரோல் எடுக்க முடிவெடுத்துள்ளது.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications