For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துரித உணவுகளின் தரம் என்ன ?... மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவு !!!

Google Oneindia Tamil News

டெல்லி : நாடு முழுவதும் நெஸ்லே உள்ளிட்ட 7 நிறுவனங்கள் வெளியிடும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட துரித உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் காரீயம் கலந்த பிரச்சனையைத் தொடர்ந்து, நூடுல்ஸ் மற்றும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரெடிமேட் துரித உணவுகள் மீது நுகர்வோருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

noodles

இதனைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் நூடுல்ஸ் விற்பனையில் முக்கிய அங்கம் வகிக்கும் நெஸ்லே இந்தியா, ஐடிசி, இந்தோ நிஸ்ஸின் புட், ஜி.எஸ்.கே. கன்ஸ்யூமர் ஹெல்த் கேர், சி.ஜி. புட்ஸ் இந்தியா, ருச்சி இன்டர்நேஷனல் மற்றும் ஏ.ஏ. நியூட்ரிஷியன் உள்ளிட்ட 7 நிறுவனங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.

அந்த 7 நிறுவனங்களும் விற்பனைக்கு அனுப்பியுள்ள உணவுப் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதா வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய திட்டமிட்டுள்ளது.

English summary
Food Standards and Standards commission asked report from state Govt on 7 companies's Readymade Foods
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X