For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014 லோக்சபா தேர்தல் செலவு ரூ.3,426 கோடி- அதிக செலவு பிடித்த தேர்தல் இது தான்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: 2014 லோக்சபா தேர்தலுக்காக ரூ.3426 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலை விட 131% சதவிகிதம் அதிகமாகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற லோக்சபா தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ.1,483 கோடி என்கிறது புள்ளிவிபரம்.

இது தேர்தல் கமிஷன் செய்த செலவுதான். ஆனால் 9 கட்டமாக நடைபெற்ற இந்த லோக்சபா தேர்தலுக்கு மட்டும் அரசியல் கட்சிகள், ஊடக விளம்பரங்களுக்கும், தேர்தல் செலவுக்கும் சேர்த்து சுமார் 50,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது புள்ளிவிபரம் ஒன்று.

வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் ஆணையமும் தாராளமாக செலவு செய்தது.

20 மடங்கு அதிகம்

20 மடங்கு அதிகம்

முதன்முறையாக லோக்சபா பொதுத்தேர்தல் நடைபெற்ற போது செலவிடப்பட்ட தொகையை விட 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கான செலவு பல மடங்கு அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

1952 தேர்தலில் ரூ. 10.45 கோடிதான்

1952 தேர்தலில் ரூ. 10.45 கோடிதான்

நாட்டின் முதல் பார்லிமென்ட் தேர்தல் நடந்த 1952-ல் 10 கோடியே 45 லட்சம் ரூபாய், 1957-ல் 5 கோடியே 90 லட்சம் ரூபாய், 1962-ல் 7 கோடியே 32 லட்சம் ரூபாய், 1967- 10 கோடியே 79 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய், 1971-ல் 11 கோடியே 60 லட்சத்து 87 ஆயிரத்து 450 ரூபாய், 1977-ல் 23 கோடியே 3 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டது.

ரூ. 50 கோடியை தொட்ட செலவு

ரூ. 50 கோடியை தொட்ட செலவு

1980-ல் 54 கோடியே 77 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய், 1984-ல் 81 கோடியே 51 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய், 1989-ல் 154 கோடியே 22 லட்சம் ரூபாய், 1991-ல் 359 கோடியே 10 லட்சத்து 24 ஆயிரத்து 679 ரூபாய் செலவிடப்பட்டது.

ரூ. 600 கோடியை எட்டிய செலவு

ரூ. 600 கோடியை எட்டிய செலவு

1996-ல் 597 கோடியே 34 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய், 1998-ல் 666 கோடியே 22 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய், ஆட்சிக் கலைப்பால் அதற்கு அடுத்த ஆண்டே, 1999-ல் நடந்த தேர்தலில் 880 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.

ரூ.1300 கோடி செலவு

ரூ.1300 கோடி செலவு

2004-ல் ஆயிரத்து 300 கோடி ரூபாய், 2009-ல் ஆயிரத்து 400 கோடி ரூபாய் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காரணம் தேர்தலுக்கான செலவு ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதுதான் என்கின்றனர். முதல் தேர்தலின் போது 60 பைசாவாக இருந்த செலவு 2009ம் ஆண்டு அது 12 ரூபாயாக உயர்ந்துள்ளது.

English summary
This was the most expensive Lok Sabha elections entailing a cost of Rs 3426 crore to the national exchequer, a substantial jump of 131% over the expenses incurred in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X