For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மாநிலங்களவையை தொடர்ந்து மக்களவையிலும் ஜிஎஸ்டி மசோதா வாக்கெடுப்பின் மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி சட்ட மசோதாவான இந்த ஜிஎஸ்டி மசோதா கடந்த ஆண்டு லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் ராஜ்யசபாவில் அதை நிறைவேற்ற முடியாமல் தவித்து வந்தது.

GST Bill Passed in Lok Sabha

இந்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொடுத்த பரிந்துரயைின்பேரில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த திருத்தங்களுடன் சமீபத்தில் ராஜ்யசபாவில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இதை மீண்டும் லோக்சபாவில் நிறைவேற்ற வேண்டும். எனவே இன்று மீண்டும் லோக்சபாவில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது திருத்தப்பட்ட மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாலும், கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே ஆதரவு தெரிவித்ததாலும் இந்த மசோதா லோக்சபாவில் எந்த சிக்கலும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஏனேனில் பாஜகவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் மக்களவையில் இருப்பதால் சிக்கல் இல்லாம்ல மசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேறியதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

English summary
The crucial Goods and Services tax (GST) Bill will be placed in Lok Sabha today for approval after it was passed by the Rajya Sabha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X