For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''யப்பா..இது காஃபி பேஸ்டுப்பா'' - பாஜக பட்ஜெட்டை கலாய்த்த ஹர்திக் படேல்

By
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநில பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கடந்த ஆண்டின் காஃபி பேஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சியின் ஹர்திக் படேல்.

படேல் சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு மற்றும் விவசாயின்களை கடன்களை தள்ளுபடி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹர்திக் படேல் 2018ல் உண்ணாவிரதம் இருந்தார்.

தொடர் உண்ணாவிரதத்தால், 20 கிலோ வரை உடல் இடை குறைந்தார். இதையடுத்து படேல் சமூகத்தின் தலைவராக உறுவானார் ஹர்திக் படேல்.

2 முறை குண்டாஸ்... பாஜக கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்2 முறை குண்டாஸ்... பாஜக கல்யாணராமன் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா? சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

ஹர்திக் படேல்

ஹர்திக் படேல்

ஹர்திக் படேல் தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து, போராட்டத்தில் வெற்றி பெற்றார். இவரோடு இருந்த தலைவர்கள் பாஜகவில் சேர, கடந்த 2019ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் ஹர்திக் படேல். இதனால் பாஜகவுக்கு குஜராத்தில் நெருக்கடி கொடுக்கும் நபராக ஹர்திக் படேல் பார்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பாஜகவை தொடர்ச்சியாக எதிர்த்துப் பேசி வருகிறார்.

குஜராத் பட்ஜெட்

குஜராத் பட்ஜெட்

குஜ்ராத் மாநில பட்ஜெட் சமீபத்தில் வெளியானது. பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனத்தை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார் ஹர்திக் படேல். குஜராத் மாநிலத்தின் இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் கடந்த ஆண்டு பட்ஜெட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை காஃபி செய்து புதுதுபோல் கொடுத்துள்ளார்கள்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் திண்டாடி வருகிறார்கள். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுட்தி தர குஜராத் அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

இளைஞர்கள்

இளைஞர்கள்

குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் 75000 -80000 மாணவர்கள் படிப்பு முடித்து வெளியே வருகிறார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்தெல்லாம் இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை. புதிதாக ஒரு திட்டம் கூட கொண்டுவராத அரசு இது. இவர்களை எப்படி நம்புவது. குஜராத்தில் மட்டும் 5 மில்லியன் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு அரசு புது சட்டம் கொண்டு வரவேண்டும்'' என்று பேசியுள்ளார்.

English summary
Hardik Patel of the Congress party said that the budget presented by the BJP government in Gujarat was last year's copy paste.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X