தொடர் விடுமுறை... திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை வந்துள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாள்கள் தொடர் விடுமுறை ஆகிவிட்டது.

இதனால் பல்வேறு இடங்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் கோயம்பேடு பஸ் நிலையம் மக்கள் கூட்டம் அலை அலையாக காணப்படுகிறது.

இன்னும் சிலர் இந்த 4 நாள்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள திருப்பதிக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதியும் நிரம்பியுள்ளது. கூட்ட நெரிசலால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டதால் மக்கள் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
On the acoount of continuous 4 days leave, this video shows that how Tirupathi is full of crowd and because of heavy rush, pilgrims are affected.
Please Wait while comments are loading...