முக்கிய இந்திய நகரங்களை தீவிரவாதிகள் தாக்கக்கூடும்: உளவத்துறை எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத் துறை டெல்லி போலீசாரை எச்சரித்துள்ளது. இதையடுத்து டெல்லி போலீசார் பிற மாநில போலீசாரை எச்சரித்துள்ளனர்.

High alert declared as IB warns of big terror strikes in major Indian cities

மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. ஆனால் எந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதை உளவுத் துறை தெரிவிக்கவில்லை.

பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், மால்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டுத்தலங்கள், மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், மெட்ரோ நிலையங்கள், விமான நிலையங்கள், ஸ்டேடியம்கள், சுற்றுலாதலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் பிற மாநில போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

முன்னதாக இந்த மாத துவக்கத்தில் டெல்லியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Delhi police has issued an advisory to its counterparts across the country to step up security in the wake of an Intelligence Bureau warning on terror attacks.
Please Wait while comments are loading...