For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு உற்பத்தியில் சாதனையாம்.. தமிழக அரசுக்கு மத்திய அரசின் கிருஷ் கர்மான் விருது!

தமிழக அரசுக்கு மத்திய அரசின் கிருஷ் கர்மான் விருது வழங்கப்பட்டது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்த தமிழகத்துக்கு கிருஷி கர்மான் விருதை மத்திய அரசு வழங்கியது.

உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைக்கும் மாநில அரசுக்கு 'கிருஷி கர்மான்' விருது வழங்கப்படுகிறது. 2015-2016-ஆம் ஆண்டுக்கான விருது தமிழக அரசுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Highest Foodgrain production : PM presents Krishi Karman award to TN govt

இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த விழாவில் தமிழக அரசுக்கான விருதை பிரதமர் மோடியிடம் அமைச்சர் துரைக்கண்ணு பெற்றார். நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது டெல்லியில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வழங்கப்பட்டது. விருதில் ஒரு கோப்பையும், பதக்கமும், ரூ. 5 கோடி ரொக்கமும் வழங்கப்பட்டது.

அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சாமிநாதன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராசாத்தி ஆகியோர் முன்னோடி விவசாயிகளாக அறிவிக்கப்பட்டு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

இருவரும் முறையே கடந்த 2015-16-ஆம் ஆண்டு ஒரு ஹெக்டேருக்கு 9563 கிலோ நெல்லும், 1700 கிலோ உளுந்தும் பயிரிட்டமைக்காக சிறந்த செயல்திறனுக்கான விருது வழங்கப்பட்டது.

English summary
Prime Minister Narendra Modi on Saturday presented the Krishi Karman award to Tamil Nadu for highest foodgrain production, including paddy, pulses and millets, for the year 2015-16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X