இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இமாச்சல பிரதேசத்துக்கு கடந்த 2017ல் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக உள்ளார்.
இந்நிலையில் இமாச்சல பிரதேச சட்டசபையின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.

இன்று தேர்தல்
அதன்படி இமாச்சல பிரதேசத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் கூறியதன் அடிப்படையில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் தற்போது குளிர் காலமாகும். இதனால் ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்குத் துவங்கியது. துவக்கம் முதலே சில வாக்குச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தேர்தல் விறுவிறுப்பானது. சில வாக்குச்சாவடிகளில் மக்கள் யாரும் இல்லாத நிலை இருந்தது. இந்த ஓட்டுப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

55.74 லட்சம் வாக்காளர்கள்
இன்றைய தேர்தலில் மொத்தம் 55 லட்சத்து 74 ஆயிரத்து 793 பேர் ஓட்டளிக்க தகுதியானவர்கள். இதில் ராணுவ பணி, மத்திய அரசு பணி உள்ளிட்டவற்றால் 67,532 பேர் சர்வீஸ் வாக்காளர்கள் ஆவார்கள். மாறாக 55,07,261 பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். அதோடு 2022 ஜனவரி 1 முதல் அக்டோபர் 1 தேதி வரை மாநிலத்தில் 18 வயது நிரம்பிய 43,173 பேருக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புதிய வாக்காளர்களாக இன்று ஓட்டளிக்க உள்ளனர். ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 1,500 பேர் மட்டுமே ஓட்டளிக்க உள்ளனர். வாக்காளர் வசதிக்காக மாநிலத்தில் 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 68 தொகுதிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக 67 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் 11,500க்கும் மேற்பட்ட மாநில போலீஸார் என மொத்தம் 30,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மும்முனை போட்டி
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டெல்லி, பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆம்ஆத்மியும் இங்கு களம் இறங்கி உள்ளதால் மும்முனை போட்டியாக உள்ளது. இருப்பினும் நேரிடை போட்டி என்பது பாஜக-காங்கிரஸ் இடையே தான் இருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் மாநிலத்தில் உள்ள 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

களத்தில் 412 வேட்பாளர்கள்
இந்த கட்சிகள் தவிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ராஷ்டிரய தேவபூமி கட்சி உள்ளிட்டவைகளும் போட்டியிட்டுள்ளன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும், பகுஜன் சமாஜ் 53 இடங்களிலும் ராஷ்ட்ரிய தேவ்பூமி கட்சி 29 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. களத்தில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நட்சத்திர தொகுதிகள் எவை?
இந்த தேர்தலில் தற்போதைய முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் அக்னிஹோத்ரி ஹரோலி தொகுதியிலும், முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் சிம்லா புறநகர் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளனர். இந்த தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்துடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதுதவிர மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாகூர் ஹமீர்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆவார். இதனால் ஹமீர்பூர் சட்டசபை தொகுதியும் கவனம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் நரீந்தர் தாகூர், காங்கிரஸ் சார்பில் புஷ்பேந்திர வர்மா, ஆம்ஆத்மி சார்பில் சுஷில் குமார் சுரோஜ் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

டிசம்பர் 8இல் வாக்கு எண்ணிக்கை
இன்றைய ஓட்டுப்பதிவு என்பது மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டுப் பாதுகாக்கப்படும். இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் இமாச்சலில் புதிதாக ஆட்சியை எந்த கட்சி அமைக்கும் என்ற விபரம் தெரியவரும்.

கருத்து கணிப்புகள்
முன்னதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என கூறப்பட்டு இருந்தது. ஏபிபி நியூஸ்-சிவோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 31 முதல் 39 இடங்களிலும், காங்கிரஸ் 29 முதல் 37 இடங்களிலும், ஆம்ஆத்மி ஒரு இடத்திலும் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது. இந்தியா டிவி-மேட்ரைஸ் கருத்து கணிப்பில் பாஜக 41 இடங்களிலும், காங்கிரஸ் 25 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருந்தது நினைவுக்கூரத்தக்கது.

தலைவர்கள் பிரசாரம்
தேர்தலையொட்டி கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபிநட்டா உள்பட பலர் பிரசாரம் செய்தனர். இதில் ஜேபி நட்டாவுக்கு இமாச்சல பிரதேசம் சொந்த மாநிலமாகும். காங்கிரஸ் சார்பில் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரசாரம் செய்யவில்லை. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்வதால் இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கவில்லை. அதேவேளையில் ஆம்ஆத்மி சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அக்கட்சியின் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications