For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடி, ஒபாமா இடையே ஹாட்லைன்: ரிசீவரை எடுங்க, பேசுங்க

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் பல விவகாரங்கள் குறித்து பேச வசதியாக ஹாட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் தவிர அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பேசவும் ஹாட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது இரு நாட்டு தலைவர்களும், ஆலோசகர்களும் எந்த நேரம் வேண்டுமானாலும் நேரடியாக தொலைபேசி மூலம் பேசிக் கொள்ளலாம்.

இது குறித்த விவரம் வருமாறு,

ஹாட்லைன் என்றால்?

ஹாட்லைன் என்றால்?

ஹாட்லைன் என்றால் நாம் யாருடன் பேச விரும்புகிறோமோ அவரை நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்வது. தற்போது மோடிக்கும், ஒபாமாவுக்கும் இடையே ஹாட்லைன் போடப்பட்டுள்ளது அல்லவா. மோடி ரிசீவரை எடுத்தாலே போதும் அந்த அழைப்பு ஒபாமாவு்கு தானாக செல்லும். மோடி ஒபாமாவின் எண்ணை டயல் செய்யத் தேவையில்லை.

ஹாட்லைன்

ஹாட்லைன்

ஹாட்லைன் மூலம் தொடர்பில் உள்ள நாடுகள்,

அமெரிக்கா- ரஷ்யா

அமெரிக்கா- இங்கிலாந்து

ரஷ்யா- சீனா

ரஷ்யா- பிரான்ஸ்

ரஷ்யா - இங்கிலாந்து

இந்தியா - பாகிஸ்தான்

அமெரிக்கா - சீனா

சீனா - இந்தியா

சீனா - ஜப்பான்

வடக்கு மற்றும் தென் கொரியா

இந்தியா - அமெரிக்கா

ஹாட்லைனின் பயன்

ஹாட்லைனின் பயன்

ஹாட்லைன் நாம் விரும்பும் நபரை தொடர்பு கொள்ள பாதுகாப்பான இணைப்பு ஆகும். அமெரிக்கா, இந்தியா இடையே ஹாட்லைன் அமைக்க எடுத்த முடிவு இருநாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை அதிகரித்துள்ளதையே காட்டுகிறது. கூறப் போனால் இரு நாடுகளுக்கு இடையேயான நம்பிக்கை புதிய உயரத்தை தொட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த ஹாட்லைன் உதவும்.

எது பற்றி?

எது பற்றி?

தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பற்றி பேச ஹாட்லைன் மிகவும் உதவியாக இருக்கும். இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பாதுகாப்பு குறித்து பேசுவார்கள் என்பதால் அவர்களுக்கிடையேயான ஹாட்லைன் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையேயான ஹாட்லைன் சர்வதேச பாதுகாப்புக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இந்தியா, அமெரிக்கா இடையேயான ஹாட்லைன் இரு பெரும் தலைவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக உள்ளதால் அது முக்கியமான ஒன்றாகும்.

English summary
The setting up of a hotline between the Prime Minister of India and the President of the United States of America is significant on several fronts. What makes this even more significant is that a hotline has been set up between the two national security advisors as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X