For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் பாஜகவின் ஏடிஎம் மிஷின் அல்ல: தொழிலதிபர் அதானி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நான் ஒன்றும் பாஜகவுக்கோ அல்லது நரேந்திரமோடிக்கோ ஏடிஎம் மிஷின் கிடையாது என்று தொழிலதிபர் கவுதம் அதானி தெரிவித்தார்.

குஜராத்தில் தொழிலதிபர் அதானிக்கு மோடி அரசு குறைந்த விலையில் நிலங்களை அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றன. இதற்கு பதிலாக, அதானி பாஜகவுக்கு தேர்தல் நிதி அளிப்பதாகவும் அவை குற்றம்சாட்டுகின்றன. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இக்குற்றச்சாட்டுகள் பற்றி அதானி கூறியதாவது:

'I'am not Bjp's atm machine' says Adani

குஜராத்தில் எனக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையையும் மோடி செய்யவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. மோடி தனது கலந்துரையாடல்கள் அனைத்திலுமே கொள்கை சார்ந்துதான் பேசுவாரே தவிர தனிப்பட்ட நிறுவனங்கள் சார்ந்து ஒருபோதும் பேசியதில்லை. நான் பாஜகவுக்கோ, மோடிக்கோ ஏடிஎம் மிஷின் கிடையாது.

சில கட்சிகள் குறிப்பிட்டு குற்றம்சாட்டும் நிலங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதானி குரூப் குஜராத்தில் வாங்கியது. அப்போது பாஜக ஆட்சியில் இல்லை. காங்கிரஸ் அரசாங்கம்தான் இருந்தது.

சதுர மீட்டர் நிலம் 1 ரூபாய்க்கு அப்போது வாங்கப்பட்டது. ஆனால் மோடி அரசிடம் நிலம் வாங்கும்போது ஒரு சதுர மீட்டர் நிலத்தை 15 ரூபாய்க்கு வாங்கினோம். இது எப்படி சலுகையாகும் என்பது புரியவில்லை. மேலும், நாங்கள் வாங்கியவை அனைத்துமே தரிசு மற்றும் விவசாய பயன்பாடு இல்லாத நிலங்கள்தான்.

ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் நாங்கள் தொழில் செய்ய நிலம் வாங்கியுள்ளோம். அங்கெல்லாம் காங்கிரஸ் அரசு ஆட்சியின்போதுதான் நிலம் வாங்கப்பட்டது. எந்த ஒரு அரசியல் கட்சியுமே தாங்கள் ஆளும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருக வேண்டும் என்று நினைப்பது வழக்கம்தான். அதன்படி அனைத்து கட்சிகளுமே எங்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் சோனியா காந்தியும், ராகுலும் எனக்கு மோடி அரசு சிறப்பு சலுகை செய்வதாக மக்களை திசை திருப்புகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அதானி தனது 16 வயதில் சொந்த மாநிலமான குஜராத்தில் இருந்து மும்பைக்கு தொழில் செய்ய வந்தார். வைர வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவர் மீண்டும் குஜராத் திரும்பி சிறிய பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றை நடத்தினார்.

1988ம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் இறஷங்கினார். இதன்பிறகு படிப்படியாக முன்னேறி தற்போது பெரும் தொழிலதிபராகியுள்ளார்.

English summary
Adani, who has been the reason behind many allegations aimed at Modi by rival parties, said, "I have never received any special treatment from Modi, nor do I expect any. In any of his discussions, Modi always talks about policy matters and never about individual companies. I am not BJP's ATM machine."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X